Posts

Showing posts from June, 2020

நோய் எதிர்ப்பு சக்தி அளிக்கும் உணவு பழக்கம்

கொரானாவுடன் வாழ பழகி கொள்ளும் சூழ்நிலை ஆகிவிட்டது. தகுதி உள்ளவை தப்பி பிழைக்கும் என்பது பரிணாம வளர்ச்சியின் விதி. இந்த கொடும் சூழலில் தப்பி பிழைக்க நான் கை கொள்ளும் உணவு பழக்கத்தை என் நண்பர்கள் உறவினர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன் முதலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகளை எடுத்து கொள்ள வேண்டும். கியூபா இன்று கொரானா போரில் குறைந்த இழப்புகளை சந்திக்க காரணம், நமது நாட்டு முருங்கை இலையில் இருந்து எடுத்த, முருங்கை பவுடர்.தினமும் சாப்பாட்டில் முருங்கை கீரை சேர்த்து கொள்ளலாம். அடுத்து, நுரையீரல் பாதுகாப்பை உறுதி செய்யும் விட்டமின் சி கொண்ட ஆரஞ்ச், நெல்லிக்காய், கேரட், அன்னாசி, எலுமிச்சை,  போன்ற பழங்களும் அகத்தி கீரை சாறும், இஞ்சியும், தேனும் எடுத்து கொள்ளலாம் விட்டமின் பி காம்ப்ளக்ஸ் அசைவ உணவு மூலமே நமக்கு கிடைக்கும். குறைந்த பட்சம் முட்டை எடுத்து கொள்ளலாம்காலை 6 முதல் 7 மணி வரையில் வெயிலில் நின்றால், விட்டமின் டி கிடைக்கும் அடுத்து நமது பாரம்பரிய மருத்துவம் ஆன சித்தா ஆயுர்வேதா மருத்துவ கசாயம் ஆன, கபசுர குடிநீர், இந்து காந்த கசாயம் வெறும் வயிற்றில் எடுத்து கொள்ளலாம்.