நோய் எதிர்ப்பு சக்தி அளிக்கும் உணவு பழக்கம்

கொரானாவுடன் வாழ பழகி கொள்ளும் சூழ்நிலை ஆகிவிட்டது. தகுதி உள்ளவை தப்பி பிழைக்கும் என்பது பரிணாம வளர்ச்சியின் விதி. இந்த கொடும் சூழலில் தப்பி பிழைக்க நான் கை கொள்ளும் உணவு பழக்கத்தை என் நண்பர்கள் உறவினர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன்
முதலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகளை எடுத்து கொள்ள வேண்டும். கியூபா இன்று கொரானா போரில் குறைந்த இழப்புகளை சந்திக்க காரணம், நமது நாட்டு முருங்கை இலையில் இருந்து எடுத்த, முருங்கை பவுடர்.தினமும் சாப்பாட்டில் முருங்கை கீரை சேர்த்து கொள்ளலாம்.
அடுத்து, நுரையீரல் பாதுகாப்பை உறுதி செய்யும் விட்டமின் சி கொண்ட ஆரஞ்ச், நெல்லிக்காய், கேரட், அன்னாசி, எலுமிச்சை,  போன்ற பழங்களும் அகத்தி கீரை சாறும், இஞ்சியும், தேனும் எடுத்து கொள்ளலாம்
விட்டமின் பி காம்ப்ளக்ஸ் அசைவ உணவு மூலமே நமக்கு கிடைக்கும். குறைந்த பட்சம் முட்டை எடுத்து கொள்ளலாம்காலை 6 முதல் 7 மணி வரையில் வெயிலில் நின்றால், விட்டமின் டி கிடைக்கும்
அடுத்து நமது பாரம்பரிய மருத்துவம் ஆன சித்தா ஆயுர்வேதா மருத்துவ கசாயம் ஆன, கபசுர குடிநீர், இந்து காந்த கசாயம் வெறும் வயிற்றில் எடுத்து கொள்ளலாம்.
MGR Medical University Vice Chancellor கபசுரகுடிநீர் வைரஸ்க்கு எதிராக நோய் தீர்க்க சிறப்பாக செயல்படுகிறது, வைரசின் மேலே உள்ள புரோட்டீன்களை கவ்வுகிறது, அது எப்படி என்பதை ஆராய்ந்து வருவதாக பேட்டியளித்துள்ளார்.
நெஞ்சின் கபம் போம்
நிறை இருமி நோயும் போம்
விஞ்சு வாதத்தின் விளைவு போம்
வஞ்சியரே வாய் கசபிக்கும் மாமலையில் விளையும்  சுண்டைக் காயை சுவைப்பதர்கே
                         -   அகத்தியர்

நெஞ்சில் எந்த கபச் சளியும்
நீக்கும்.  எந்த கிருமியுனாலும் வரும் நோய்களும் போய்விடும். வாதசுரம் வலியும் போக்கும்   பத்து சுண்டைக் காயை
அல்லது சுண்ட வத்தலை கலப்படமில்லாத பசு நெய்யில் அல்லது கலப்படமில்லா தேங்காய் எண்ணெயில் அல்லது கலப்படமில்லாத நல்லெண்ணெயில்  வறுத்து 
மெது மெதுவாக
ஒன்று ஒன்றாக
சுவைத்து  சுவைத்து சுவைத்து
மூன்று நாள் சாப்பிட்டு வரலாம்.
என்னை பொறுத்த வரை சித்த ஆயுர்வேத மருத்துவ ஆய்வு நவீன படித்த பட வேண்டும். நமது பாரம்பரிய மருத்துவத்தில் எந்த நோய்க்கு எதில் தீர்வு உண்டு என்பது பற்றி குறிப்பு உண்டு. ஆனால் அந்த பொருளின் வேதியல் சமன்பாடு குறித்து ஆய்வுகள் மேற்கொள்ள பட வேண்டும். இதில் ஆயுர்வேதத்தை விட, சித்த மருத்துவம் சில minerals பயன்படுத்துகிறது. இப்போதைய தேவை ஆயுர்வேதம் சித்தா அலோபதி ஓமியோபதி இணைந்த ஒரு schemed medical protocol. அதை மருத்துவ நிபுணர்கள் வரையறுத்து தரும் வரை, நம் காலடியில் கிடக்கும், மருத்துவ குணம் கொண்ட, முருங்கை, அகத்தி, நெல்லி, இஞ்சி, அரஞ்சு, தேன், சுண்டைக்காய் ஆகியவற்றை உணவில் தவறாது சேர்ப்போம். கலி தீர்ந்து நலம் சூழட்டும் இவ்வையகம் யாவும்.

Comments

Popular posts from this blog

ஆதித்த கரிகாலன் கொலை வழக்கு ( பகுதி4)

ஆதித்த கரிகாலன் கொலை வழக்கு

ஆதித்த கரிகாலன் கொலை வழக்கு ( பகுதி5)