Posts

Showing posts from May, 2020

பாலகுமாரன்

முதலில் நான் வாசித்த பாலகுமாரனின் நூல் உடையார். அப்போது வயது 20. பொன்னியின் செல்வனை தொடர்ந்து, சோழர் பித்து தலைக்கு ஏறி சோழர் குறித்த சரித்திர நாவல்கள் வாசிக்க ஆரம்பித்த போது , உடையாரை வாசித்தேன். வாசிக்க ஆரம்பித்த புதிதிதில் அவரது  எழுத்து நடை single sentence making ஆக இருக்கிறது, அலுப்பு ஊட்டுகிறது என எனது blog ல் கிண்டல் செய்து பதிவு இட்டு இருக்கின்றேன்.  அவர் எழுத்தின் கணத்தை புரிந்து கொள்ள முடியாத வயது அது. 23வயதில் அப்பாவை இழந்து, ஒரே பெண்ணாக தவித்து கிடந்த போது, அவரது எழுத்து எனக்கு வேறு பரிமாணத்தை காட்டியது. சோகத்தில் உழன்று கிடந்த என்னை தூக்கி நிறுத்தியது அவரது எழுத்து. வாழ்க்கை இதனோடு நிற்காது. எழு, ஓடு என உத்வேகம் அளித்தது அவரது எழுத்து.உன்னுடைய சோகத்தை, அழுகையை மற்றவரிடம் காட்டாதே . அதில் சிலருக்கு அக்கறையில்லை, சிலருக்கு அதில் சந்தோஷம். அழுகையோ அவமானமோ மனதில் நிறுத்தி வாழ்க்கையை நடத்து என்று கற்று தந்தவர் அவர். சென்னை செல்லும் போதெல்லாம் மயிலாப்பூர் வாரன் ரோட்டில் உள்ள அவரது வீட்டை வெளியில் இருந்து பார்த்து விட்டு வருவேன். அவர் நேரில் வாசகர்களை சந்திக்கும் பழக்கம் கொண

காபி புராணம்

காபி இன்று டல்கோனா காபி, இந்த லாக் டவுன் நேரத்தில் , இணையத்தில் ஒரு ரவுண்டு வந்தது. டல்கோனா, காபி குடிக்காவிட்டால், தெய்வ குத்தம் போல் பார்க்கப்பட்டது. ஆனால், என்னை பொருத்தவரை, காபிக்கு ஒரு தனி குணம் உண்டு. இப்படி ஃப்ரிட்ஜில் உறைய வைத்து குடிப்பது காபி அல்ல எங்கள் தஞ்சை மாவட்டத்தில் , கும்பகோணம் டிகிரி காபி பிரசித்தி பெற்றது. அது என்ன டிகிரி காபி? காபி எப்போது டிகிரி படித்தது? பித்தளையில் டம்ளர் - டவரா ‘செட்’டையும் ஃபில்டரையும் வெச்சு காபி ஆத்திட்டா மட்டும் கும்பகோணம் டிகிரி காபி ஆகிடாது. காபி தூளை வறுத்து அரைத்துத் தரம் பிரிக்கிறதுல ஏ, பி, ரோபோஸ்ட்ன்னு மூணு தரம் இருக்கு. இதுல ‘பி’ தான் நம்பர் ஒன் தரம். அதாவது சிக்கரியின் அளவு குறைவாக, காபியின் அளவு அதிகமாக உள்ள டிகிரி கணக்கு. அது தான் டிகிரி காபியின் அடித்தளம். அடுத்து டிகாஷன். ஒரு வாட்டி டிகாஷன் போட்டு, 3 முறை காபி போட்டால் சுவை கெடும். அடுத்து தண்ணி கலக்காத, கள்ளி சொட்டு பதத்தில் உள்ள பசும் பால் இது முன்றும் தான் டிகிரி காபியின் சூட்சமம். பித்தளை டபரா டம்பளர் அலங்காரம் தான் டிகிரி காப்பிக்கு பால் ரொம்ப முறுக கூடாது. பதம் ஆக முதல