Posts

Showing posts from July, 2022

ஆடி திருவாதிரையன்

சிறு வயதில் இருந்தே சோழர்கள் எனக்கு ஆதர்சமானவர்கள். பொன்னியின் செல்வன் நாவல் தான் என் சோழ பித்துக்கு விதை போட்டதோ என்று யோசித்தால், இல்லை என்பதே பதில். இந்த சோழ பித்துக்கான விதை என் தந்தை போட்டது. சோழ வரலாற்றில் என் தந்தையின் மனம் கவர்ந்தவர்கள் இருவர். ஒருவர் முதலாம் இராஜ இராஜ சோழனின் தமக்கையும் சோழர்களின் ஒப்புயர்வற்ற மாதரசியுமான குந்தவை பிராட்டி. அந்தப்புர பதுமைகளாக வலம்வந்த இளவரசிகள் மத்தியில், தம் புத்தி கூர்மையினால், தற்போதைய அரசு மருத்துவமனைகள் போல், இலவச சிகிச்சை வழங்கும் ஆதுல சாலைகளை சோழ மண்டலம் எங்கும் தமக்கு கிடைத்த சொத்துக்களை கொண்டு ஸ்தாபித்த அந்த மாதரசியின் அறிவாற்றலையும் , ஈகை குணத்தையும் எப்போதும் புகழ்ந்து பேசிக் கொண்டு இருப்பார் என் தந்தை. சோழ வரலாற்றில் என் தந்தையின்  மனங்கவர்ந்த இரண்டாவது நபர் இராஜேந்திர சோழன். வடக்கே கங்கை வரையிலும் கீழ்திசை நாடுகளில் பெரும்பாலான நாடுகளை ஒரு தமிழ் மன்னனாக கைப்பற்றிய  இராஜேந்திர சோழனின் படையெடுப்புகள் வெற்றிகள் பற்றிய பெருமித உணர்வு என் தந்தையிடம் எப்போதும் மிளிரும். ஒரு மன்னன் நாடு பிடிப்பது பெரிய விஷயமா? இதில் விதந்தோந்த என்ன இருக்

பொன்னியின் செல்வன்

மூவேந்தர்களில் மற்ற இரு வேந்தர்களை விட, தற்காலத்தில்  சோழர்களின்‌ வரலாறு,அதிகம் கொண்டாடுப்படுவதற்கு முக்கிய காரணம் பொன்னியின் செல்வன் தான். இதை யாரும் மறுக்க முடியாது. ஆனாலும், பாண்டியர்களையும் நாவல் தலைவராகளாக கொண்டு, தீபம் நா. பார்த்தசாரதியும், சாண்டியல்யனும் பல நாவல்கள் எழுதியுள்ளனர்.ஆனாலும் பொன்னியின் செல்வன் பெற்ற கவன ஈர்ப்பையும் , கொண்டாட்டத்தையும்  அந்த நாவல்கள் பெறவில்லை.   பொன்னியின் செல்வனின் மாபெரும் வெற்றிக்கு,கல்கியின் எழுத்து வன்மை காரணம் என்றாலும், அவர் எடுத்துக் கொண்ட கதைக்களமும் ஒரு முக்கிய காரணம். ஆயிரம் ஆண்டுகளையும் தாண்டிய நீண்ட நெடிய வரலாறு கொண்ட, சோழ பேரரசின் வரலாற்றில், ஒளி மிகுந்த, எழுச்சியான காலக்கட்டம் கிபி 950- 980 கிபி. இதை கல்கியே நாவலில் , சோழ சம்ராஜ்ஜியம் இப்போது ஆடி புனல் போல் பல்கி பெருகும் காலக்கட்டம் என்று சொல்லி இருப்பார். எழுச்சி என்று ஒரு இருந்தால், போட்டியும் பொறாமையும் சேர்ந்தே வளரும் .சோழ சம்ராஜ்ஜியம் வளர்ந்து கொண்டு இருந்தாலும், கிபி 949- கிபி 962 13 வருடங்களில், கண்டாராத்தித்தர், அரிஞ்சயர், சுந்தரசோழர் என மூன்று மன்னர்களை கண்டதும், சுந்தர சோழர