Posts

Showing posts from 2021

கண்ணன் என்னும் கருந்தெய்வம்

இன்று 07/12/2021 ஸ்ரீரங்கம் வைகுந்த ஏகாதேசி பெருவிழாவில் கோதைப் பிராட்டியின் நாச்சியார் திருமொழியில் பதிமூன்றாம் பத்தாக வரும் கண்ணன் என்னும் கருத்தெய்வம் பாசுரம் அரையர் சேவையில் சேவிக்கப்படும் என்று படித்த பின் அந்த பாசுரத்தை எடுத்து படிக்க வேண்டும் என்ற ஆவல் பிறந்தது. கண்ணன் மேல் கொண்ட காதல் பித்து தலைக்கேறிய நிலையில் கோதை அவளது செவிலி தாய்மாரை நோக்கி, என்னை பழிப்பு செய்யாமல், என் நோய் தீர, கண்ணன் உடுத்திய பீதக வண்ண ஆடையினால் எனக்கு விசிறி விட மாட்டிரோ? அவன் சூடிய திருத்தூழயை ( துளசி) என் கூந்தலில் சூட மாட்டிரோ? அவன் தரிந்த வனமாலையை என் மார்பில் சேருங்கள், அவன் வாய் அமுததை கொண்டு வந்து ஊட்டுங்கள்,அதுவும் முடியவில்லை என்றால் அவன் ஊதும் புல்லாங்குழலில் தெறிக்கும் அமுத துளிகளையாவது முகத்தில் பூசுங்கள், அவன் இருக்கும் இடம் அழைத்து சென்று கண்ணனோடு பினைத்து கட்டுங்கள் என்று கதறுகின்றாள். மேலோட்டமாக பார்த்தால் விரக தாபம் போல் தான் தோன்றும்.பித்து முற்றிய யோகநிலை அது. முதல் பத்திலேயே ஆண்டாள் தாயார் தன் காதல் மானிடருக்கு உரித்தானது இல்லை என அறிவித்து விடுகின்றாள். நாச்சியாரின் கண்ணன் என்னும் க

ஒரு சதய இரவு

கூரையில் இருந்து முத்துமாலையாய் கோர்த்து, முழுமை அடையாமல் மண்ணை தழுவும் மழைத்துளிகளை வெறித்து பார்த்துக் கொண்டு இருந்தான் ஜெயந்தன்.  ஜெயந்தன் வழி வழியாக பாண்டிய வம்சத்திற்கு விஸ்வாசம் காட்டும், பாண்டிய அமைச்சர் மானபரணின் மகன். மரண படுக்கையில் அவன் தந்தை சொல்லிய வார்ததைகள் அவன் செவிகளுக்குள் ஒலித்து கொண்டே இருந்தது.”ஜெயந்தா! மீண்டும் செழிஞரை அரியனையில் ஏற்றி நீ அழகு பார்க்க வேண்டும். செழிஞரை தேசு கொள் என கர்வமாக மெய்கீர்த்தி கொண்ட, ராஜனுக்கு ராஜன் என அகம்பாவமாய் அபிடேக நாமம் முடி சூடிய அந்த ராஜராஜன் கர்வம் அழிய வேண்டும்.” என சொல்லியவாறே உயிரை விட்டார்.ஆனால் பாண்டிய வம்சம் மீண்டும் ஏழ இன்னும் முன்று தலைமுறைக்கு வாய்ப்பு இல்லாமல் போய் விட்டது. சோழ படை , பாண்டியர் படையை நிர்மூலமாக்கி விட்டது. பெரிய பாண்டியர்  சேர நாட்டின் எல்லை பகுதியில் மறைந்து வாழ்ந்து வருகின்றார். இந்த மழைத்துளி முத்துக்கள் சகதியில் விழுவதை போல், சோழர் ஆதிக்கத்தில் இருந்து விடுபடும் பாண்டியரின் அனைத்து முயற்சிகளும் வீணானது. காரணம் ஒரே பெயர் தான் இராஜ ராஜன் என அபிடேக நாமம் சூடிய அருள்மொழி. விவேகம் இருப்பவரிடம் வீரம் இருக

அப்பம் வடை தயிர்சாதம்

பாம்பேக்குப் போயிட்டு, மயிலாப்பூரையும் அம்மாவையும் அப்பாவையும் நினைச்சுண்டிருக்காதே... பாம்பேயே உன்னுடைய இடம். பாம்பேயே உன் வீடுன்னு வெச்சுக்கோ. நான் மாயவரத்தை விட்டுட்டு மெட்ராஸ் தான் எனக்குன்னு எப்படி வந்தேனோ... அதே போல, இந்த மண்ணை நன்னா உதறிட்டு, பாம்பேயை இறுகப் பிடிச்சுக்கோ. ஊரை கெட்டியா பிடிச்சுண்டா, உத்தியோகத்துல பிரியம் ஏற்படும். சொந்த ஊர் நினைப்பே இருந்ததுன்னா, உத்தியோகம் ஒட்டாது. உத்தியோகம் ஒட்டலைன்னா உயர முடியாது. உயரம் இல்லைன்னா, தாழ்த்தித்தான் பேசுவான். மண்மேல பாசம் வெச்சவன், மண்ணை விட்டுப் போகக்கூடாது. போறவன், பாசம் வைக்கப்படாது...’  அப்பம் வடை தயிர்சாதம் நாவலில் எழுத்து சித்தர் பாலகுமாரன். அப்பம் வடை தயிர்சாதம் பாலகுமாரன் அவர்களின் பிரபலமான நாவல். 2000ல் ஆனந்த விகடனில் தொடராக வந்தது. இப்போது மீண்டும் கண்ணில் பட மனதில் ஒரு சிலிர்ப்பு. அ.வ.த ,ஒரு பிராமண குடும்பத்தின் 100 வருட கால ஐந்து தலைமுறை கதையை சொல்லும்   நாவல். புரோகிதத்தை விடுத்து உணவு தொழிலை நாடி செல்லும் குடும்பம், காலத்தின் நகர்வுகளுக்கு ஈடுகொடுத்து ஐந்தாம் தலைமுறை  மென்பொருள் தொழிலில் தலைத் தூக்குவதில் முடியும்.

சிந்தனையில் உதித்தவை

நெருப்புக்கு ஏதடா சுத்தம் அசுத்தம்? இது எழுத்தாளர் ஜெயமோகன் நான் கடவுள் படத்துக்கு எழுதின வசனம். நெருப்பை எதுவும் அசுத்தப்படுத்த முடியாது. ஏன் என்று யோசித்து‌ இருக்கின்றீர்களா? நெருப்பில் உயிரினம் வாழாது. உயிரின் டி.என்.ஏ , ஆர்.என்.ஏ உள்ள புரதங்களே நினைவுகளை கடத்துக்கின்றன. உயிர்கள் இல்லாத இடத்தில் நினைவுகள் இல்லை.நினைவுகள் இல்லாத இடத்தில் நேர்மறை எதிர்மறை எண்ணங்கள் என்னும் பேதம் இல்லை. எனவே நெருப்பு அசுத்தப்படுவதில்லை. நெருப்பு போன்ற நிலையை மனம் அடங்கியவர் அடையலாம். ஆனால் களிறு போல் துள்ளும் மனத்தை அடங்கி ஆள்வது எல்லோருக்கும் வாய்ப்பதில்லை. வாய்த்தவரும் நெருப்பும் வேறில்லை.

கார்ல்மார்க்ஸ் பிறந்தநாள்

இன்று காரல் மார்க்ஸின் 203 வது பிறந்தநாள். அவரின் மூலதனம் ( Das  Capital) என்ற நூலை படிக்காமல், இளங்கலைப் பொருளாதார படிப்பை நிறைவு செய்ய முடியாது. மூலத்தனம் என்பது தொழிலுக்கான முதல், கருவிகள் ஆகிய சேமிப்பு குவியல் என முதலாளித்துவ வல்லுநர்கள் வரையறுத்த போது, " மூலதனம் என்பது வரலாற்று ரீதியான இனம் " என்ற புதிய விளக்கம் அளித்தவர் காரல் மார்க்ஸ். உழைப்பு சக்தி ஓரு பண்டமாக மாறும் போது, உற்பத்தி சாதனங்களை கொண்ட முதலாளியும், உழைப்பை தவிர வேறு எதுவுமே உடைமையாக இல்லாத கூலி தொழிலாளியும் சமூகத்தின் முக்கிய நபர்களாக இருக்கும் போது மட்டுமே மூலதனம் தோன்றுகின்றது என மார்க்ஸ் எடுத்துக் காட்டினார். முதலாளித்துவம் வேறோடி போன 19  ஆம் நூற்றாண்டின் ஐரோப்பாவில் தொழிலாளரின் குரலை ஓங்கி ஒலித்தது காரல் மார்க்ஸின் குரல். மார்க்ஸின் குரலுக்கு வலு சேர்த்தது அவரின் நன்பர் ஏங்கல்ஸின் கரம். மரணம் தாண்டியும் தன் நன்பருக்கு துணையாக நின்றார் ஏங்கல்ஸ். மார்க்ஸ் மரணத்திற்கு பின் இறுதி காரியங்கள் செய்த பிறகு, அவரின் இரு மகள்களுக்கு தன் சொத்துக்களை உயில் எழுதி வைத்தார். மார்க்ஸை நினைக்கும் போது ஜென்னியை நினைக்காம

சுஜாதா

இன்று எழுத்தாளர் சுஜாதா பிறந்தநாள்.இவருடைய, இயற்பெயர் ரங்கராஜன். "இடது ஓரத்தில்" என்ற இவருடைய சிறுகதை 1962 ஆம் ஆண்டு குமுதம் இதழில் ரங்கராஜன் என்ற பெயரில் வெளிவந்தது. குமுதம் ரா. கி. ரங்கராஜனின் பெயரும் இவர் பெயரும் குழப்பிக் கொள்ளப்பட்டதால் தன் மனைவி பெயரான, 'சுஜாதா'வைத், தன் புனைபெயராக வைத்துக் கொண்டார். கணையாழி இதழில் கடைசிப் பக்கங்கள் எனும் கட்டுரைத் தொடரை ஸ்ரீரங்கம் எஸ். ஆர் எனும் பெயரிலும் எழுதி வந்தார்.  சிறுகதை, புதினம், நாடகம், கவிதை, கட்டுரை, தொலைக்காட்சி, இணையம், திரைப்படம் என்று கால் பதித்த அனைத்துத் துறைகளிலும் தனது அழுத்தமான, தனித்துவமான முத்திரையைப் பதித்தவர் சுஜாதா (1935-2008). ஆண்டாள் முதல் அறிவியல் வரை எதையும் புதுமையாகவும் வசீகரிக்கக்கூடிய வகையிலும் வெளிப்படுத்தக்கூடிய ஆற்றல் பெற்றவை இவருடைய எழுத்துகள். சுஜாதாவின் விரிவான வாசிப்பும் அதற்கு ஒரு வகையில் காரணம்.   சுஜாதா சொல்லின் செல்வர்.‌ தொழில்முறை எழுத்தாளர் இல்லை அவர். அடிப்படையில் அவர் பொறியாளர். ஆனாலும் தம் மனதிருப்திக்காக, நேரம் கிடைக்கும் போதெல்லாம் எழுதி இருக்கின்றார். மனத்தின் குரல் வார்த்தைக

கிறுக்கல்

விவேக்கின் உடலுக்கு அவர் மகள் கொள்ளி வைத்துவிட்டு அழுத காட்சியை பார்த்த போது, நானும் 10 வருடங்கள் முன் அதே நிலையில் நின்றது நினைவுக்கு வந்தது. காயத்தை கீறி கீறி அதற்க்குள்ளே சுகம் கண்டு கிடாக்காதீர்கள், கடந்து வாருங்கள் என என் குரு பாலகுமாரன் சொல்வார். இது காயத்தை கீறி பார்ப்பதல்ல. என் வாழ்க்கையை ஓரு பார்வையாளராக திரும்பி பார்க்கிறேன்.   சிறிய வயதில் இருந்தே புராண இதிகாசங்கள் அதிகம் படிப்பேன்.அதில் அரக்கர்கள் தவம் செய்யும் போது இறவா வரம் கேட்பார்கள். முனிவார்கள் மீண்டும் பிறவா நிலை கேட்பார்கள். எனக்கு சிறுவயதில் தோன்றும், இந்த வாழ்க்கை எவ்வளவு அழகானது. இதை அனுபவிக்க தெரியாமல் இந்த முனிவர்கள் மீண்டும் பிறவா நிலை கேட்கின்றார்களே என்று தோன்றும். காரணம் என் வாழ்வு அவ்வளவு இனிமையானதாக கவலைகள் இல்லாத பட்டாம்பூச்சியின் வாழ்வாக இருந்தது. கேட்டது அனைத்தும் கிடைத்தது. கிடைத்தது, என் தந்தையின் உழைப்பினால் என்பது மனதில் பதியவில்லை. என்னை பொருத்தவரை வாழ்வு என்பது இன்ப ஓடம். ஆனால் வாழ்வின் கொடூரம் என் முகத்தில் அறைந்தது என் அப்பாவின் மரணத்தில் தான்.ஓரு பிணத்தை கண்டு துறவு பூண்டான் சித்தார்த்தன் என ப

உலக வன நாள்

இன்று உலக வன நாள். காடுகள் இன்றி அமையாதது உலகு. காடுகளின் ராஜா சிங்கம் என்றாலும், என்னை பொருத்தவரை காடுகளின் பிதாமகன் யானை தான். யானை, தனது வலசை பாதையில், தன் சாணத்தின் மூலம் ஒரு நாளைக்கு 30 கிலோ மீட்டர் அளவிற்கு, வனப்பரப்பின் எல்லையை விஸ்தரிக்க, விதைகள் தூவி செல்லும் . வேழக்காடுகள் என்றே ஊட்டி மலை பகுதியை பழம் கல்வெட்டுகள் குறித்து இருக்கின்றன. ஓடுகின்ற நதிகளின் மூலம் எல்லாமே காடுகள். காடுகள் அழிந்தால், நீரும் உணவும் இன்றி பஞ்சத்தில் மாள வேண்டியது தான். அடர்த்தியான வேழ காடுகள் மட்டும் அல்ல, கடற்கரை ஓரம் வளரும் குட்டை மரங்கள் உள்ள அலையாத்தி காடுகள், ஊசி முனை காடுகள் என காடுகளிலும் எத்தனை வகை.  தனிப்பட்ட முறையில் எனக்கு காடுகளின் அமைதி, தாய்மடியை போன்றது. மதுரையில் இருக்கும் போது பழமுதிர்ச்சோலை அடிக்கடி செல்வது வழக்கம். சூரிய ஒளிக்கூட எளிதாக ஊடுருவமுடியாத பழமுதிர்ச்சோலை மலையும், அங்கே ஓடி விளையாடும் வானரங்களும், தனி சந்நிதி கொண்டுள்ள வேலும் என்னை சங்க காலத்திற்கே அழைத்து போய்விடும். சங்க கால வேல் கோட்டத்திற்கு இன்றும் சாட்சியாய் இருப்பது பழமுதிர்சோலையும், சாளுவகுப்பம் முருகன் கோவிலும் த

பெண் என்னும் பராசக்தி

வேதாந்தம் அடிப்படையில் எல்லாமே ஜீவாத்மா என்னும் போது ஆண் என்ன? பெண் என்ன? எல்லாமே ஒளியின் துளி அல்லவா என்று தோன்றினாலும் உடல் கூறு அடிப்படையில் உடலின் ஆறு சக்கரங்களை தூண்டி விடுவது ஒரு பெண்ணிற்கு கடினம் தான். ஆனால், ஹடயோகத்தின் மூலம் இதை பெண்ணை விட ஆண் , எளிதாகவே செய்ய முடியும். மூலாதார சக்கரத்தை உச்சியில் நிறுத்தி, சகஸ்கரஹாரத்தில் பிரபஞ்சத்துடன் தொடர்பு கொள்வதே யோக நிலை. இது பெண்ணுக்கு எளிதல்ல. ஏன்? இந்த பராபட்சம் என எண்னும் போது எனக்குள் தோன்றிய விடை பெண் படைப்பின் மூலம். கருப்பை என்னும் இருளின் சக்தி அவள். இருளில் இருந்தே ஒளி தோன்றுவதால் அவளுக்கு யோகநிலையின் சகஸ்கரஹார பிரகாசம் தேவை இல்லை. என்னெனில் எல்லா பிரகாசத்தின் ஒளிப்புள்ளியும் காரிருளில் தோன்றுபவையே.

மகளிர் தினம்

மகளிர் தினம் என்பதே மேற்கத்திய சிந்தனை தான். தமிழ் சமூகத்தின் பெண்கள் பற்றி நினைத்து பார்க்கின்றேன். சங்க காலத்தில் காக்கைபாடினியர், அவ்வையார் போன்ற பெண் பால் புலவர்கள் இருந்தார்கள். தமிழ் சமூகம் பெண்களை அடிமை படுத்த வில்லை.  அதனால் தான் ஒரு மன்னனின் அவையில் சாதாரண பெண், அதுவும் வேறு நாட்டு பெண் தன் கணவன் மரணம் குறித்து கேள்வி எழுப்பி நியாயம் கேட்க முடிந்தது.   அடல்மகளிர் கொடுத்த பல தானங்கள் குறித்து பல கல்வெட்டுகள் உள்ளன. அவர்களும் தனக்கு பிடித்த ஒருவனை கணவராக ஏற்று அவனோடு வாழ்ந்தார்கள். உதாரணம் கோவலன், மாதேவி. இடைக்காலத்தில் கூட பெண்கள் அதிகாரிச்சிகளாகஆக அரசு அமைப்பில்‌ அதிகாரம் செலுத்தி உள்ளார்கள்.‌தாய் வழி சமூகமான‌ தமிழ்‌ சமூகம் என்றும் பெண்ணை ஏத்தியே தொழுதுள்ளது. கொற்றவை என அன்னையரில் மூத்தவள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளாள். குமரியாகவும் அவள் வணங்கப்பட்டுள்ளாள்.‌ உறையூரில் வெக்காளி அம்மன் கோவிலும், கமலவள்ளி நாச்சியார் கோவிலும் எல்லாருக்கும் தெரியும். செல்லாண்டி அம்மன்‌ பற்றி சிலருக்கு தான் தெரியும். யதார்த்தமாக அந்த‌ கோவில் பற்றி தெரியாமலேயே அங்கு சென்று நின்றேன். சேர, சோழ, பாண்டியரு

யானை ஆதி மனிதனின் முதல் காதல்

யானை எனக்கு‌ மிகவும் பிடித்த விலங்கு. நான் சிறுவயதில் இருந்தே குண்டான உடல்வாகு கொண்ட பெண். பப்ளிமாஸ், பிந்துகோஷ் குட்டியானை‌ போன்ற கேலிகளை கடந்து வந்துருக்கின்றேன். அதனாலோ என்னவோ எனக்கு சிறுவயதிலேயே யானை பிடிக்க தொடங்கிவிட்டது. வளர்ந்த பின் யானையின் குணாதிசயம் என்னை மிகவும் வசீகரித்தது. எவ்வளவு கம்பீரமான உயரமும், எடையும். ஆனால் குணத்தில் சிறு குழந்தை. அடக்கமான புத்திசாலியான விலங்கு. ஆனால் சீண்டினால், மதம் பிடித்த யானையின் சீற்றத்தை அடக்க முடியாது. யானையின் நீண்ட தும்பிக்கை சொல்லும் சுவாச பாடம் உணர்ந்தால், மனிதரும் 120 வருடங்கள் வாழலாம்.ஆனால் வாழ்த்தல் என்பது இருத்தலை மட்டும் குறிக்கும் நிகழ்வு அல்ல. பல்லுயிர் இயைந்து வாழும் பூமியில் மற்ற ஜீவராசிகளுக்கும்  உள்ள உரிமையை மதித்து வாழ்ந்தால் மட்டுமே, மனித வாழ்வு நிலைக்கும்; சிறக்கும். பட்டம்பூச்சிகளின்  அழிவு கூட உணவு சங்கிலியின் ஒரு கண்ணியை தகர்த்து மானுட அழிவிற்கு வழிவகுக்கும்.அதனால் தான்  ஐன்ஸ்டீன் தேனீயின் அழிவு மானுட அழிவு என்று சொன்னார். மகரந்த சேர்க்கை செய்ய தேனீக்கள் இல்லாது போனால், காடு பெருகாது. காடுகள் இல்லையெனில் மழை பொழியாது. ய

பொங்கல்

பொங்கல் பண்டிக்கை பற்றி சங்க தமிழ் பாடல்களில் குறிப்பு உண்டா என்றால் இல்லை என்பதே மேலோட்டமான பதில். ஆனால் தை நீராடல் பற்றி பல பாடல்கள் உண்டு. பானையில் பொங்கி வரும் பொங்கல் பற்றிய உவமை  சீவக சிந்தாமணியில்  உண்டு. சிலப்பதிக்காரம் சதுக்க பூதத்திற்கு புழுக்கல் ( பொங்கல் ) படையல் போட்டது பற்றி சுட்டும். பிற்காலத்தில் ராஜேந்திர சோழன் காலத்தில் மகர சங்கராந்தியாக கொண்டாடப்பட்டுள்ளது. ஆனால் இது தமிழரின் உணர்வில் கலந்த பண்டிகை. மற்றோரு வகையில் யோசித்தால், இது பழங்குடிகளின் பண்டிகை. பரத கண்டத்தின் பழங்குடிகள் எல்லாம் வெவ்வெறு பெயரில் அறுவடை திருநாளை கொண்டாடுகின்றனர். பொங்கல் திருநாள் மானுடவியல் வளர்ச்சியை பறைசாற்றும் பண்டிகை. பொங்கலோ! பொங்கல்!.