Posts

Showing posts from April, 2022

முதலாம் சடையவர்ம சுந்தர பாண்டியன்

இன்று சித்திரை மூலம் பிற்கால பாண்டியரில் புகழ்ப்பெற்ற முதலாம் சடையவர்ம சுந்தரபாண்டியனின்  ஜென்ம நட்சத்திரம். பொன்னியின் செல்வன் நாவலின் பிரமாண்டமான வெற்றிக்கு பிறகு, ராஜராஜ சோழரும், ராஜேந்திர சோழரும் கொண்டாடப்பட்ட அளவுக்கு வேறு தமிழ் மன்னர்கள் கொண்டாடப்படவில்லை.. ஆனால் இராஜேந்திர சோழருக்கு இனையாக தமிழக நிலப்பகுதிகள் தாண்டி, இன்றைய கேரளா, ஆந்திரா நெல்லூர் பகுதி, கர்நாடகாவின் கோலார் பகுதி, இலங்கை மற்றும் தாய்லந்து நாடு வரை கைப்பற்றி மிகப்பெரிய பிற்கால சாம்ராஜ்யத்தை கட்டி அமைந்தவர். ஆனால் இவரின் பிற்கால வாரிசுகள், பங்காளி சண்டையிட்டு, மாலிக் கபூரின் படையெடுப்பிற்கு காரணம் ஆனார்கள்.  ஆனால் இவர் அமைந்த ராஜப்பட்டையை சரியாக பயன்படுத்தி அமைந்தது தான் விஜயநகர சம்ராஜ்யம். பழுத்த சிவ பக்தரான இவர், சிவ ஆலயங்களுக்கு மட்டும் அல்ல வைணவ ஆலயங்கள் பலவற்றுக்கும் திருப்பணி செய்துள்ளார். திருவானைக்காவல் கோவில் மூலஸ்தான நுழைவு வாயிலில் உள்ள பாண்டியர் சின்னமாம், இரட்டை கயல் இன்னும் சுந்தரபாண்டிய மன்னரின் புகழைப் பாடிக்கொண்டே இருக்கிறது. ஸ்ரீரங்கம் கோவிலுக்கு இவர் செய்த திருப்பணிகள் பல. சிதம்பரம் கோவிலுக்கு ப

அவள் பெயர் கண்ணகி ..

சித்திரை மாத முழுநிலவு நாள் இரு தினங்களுக்கு முன் கழிந்தது. மங்கலதேவி கண்ணகி கோட்டத்தில் நடந்த விழா நிகழ்வுகளை சமூக வலைத்தளங்களில் பார்த்ததில் இருந்து மனதில் சுழற்று கொண்டு இருக்கின்றது கண்ணகி பற்றிய சிந்தனைகள். உலக பரம்பரிய தினமான இன்று தமிழ் சமூகத்தின் முக்கிய தொன்ம குறியீடான கண்ணகியை பற்றி எழுதுவதும் பொருத்தமான ஒன்று தான். காப்பிய நாயகி அவள்; வெறும் கற்பனை பாத்திரம், என கடந்து போய் விட முடியாது கண்ணகியை. அவள் இரத்தமும் சதையுமாக இம்மண்ணில் வாழ்ந்து மறைந்த பெண் மலர். இதற்கு மானுடவியல் சான்று பல உண்டு. கோவலனை கைப்பிடித்த போது அவள் பால்யம் மாறா குழந்தை தான். கண்ணகியை முதிராக் குளவியள் என்று சிலம்பு குறிப்பிடுக்கின்றது. கிள்ளை பருவத்திலேயே மணமுடித்து கொடுக்கப்பட்டு, இனி உன் வாழ்வு என்பது உன் பதியை சார்ந்தது என கணவனை மட்டுமே சார்ந்து தன் வாழ்வை துவங்கிய பேதை அவள். மாதவி என்னும் அழகி மீது மையல் கொண்டு கோவலன் கண்ணகியை பிரிய, வாழ்வு இருண்டு தான் போனது கண்ணகிக்கு. இருண்ட வாழ்வில் மீண்டும் முளைத்த வெள்ளியாக, செல்வம் கரைந்த பின்னும் மீண்டு வந்த செல்வமாக கணவன் திரும்பி வர, நல்ல எதிர்காலத்தை எதிர