Posts

Showing posts from October, 2022

பூரணை

சுற்றிலும் பசுமை போர்த்திய மலை குன்றங்கள் சூழ்ந்திருக்க உயர்ந்திருந்த அந்த மலைமுகட்டின் சதுர பீடத்தில் சிலையாய் நின்றிருந்த தேவியின் திருமுகத்தையே வெறிந்து பார்த்து கொண்டே இருந்தன சோழ இளவரசர் அருள்மொழியின் கண்கள். ஆம் அவர் இப்போது இளவரசர் தான். ஆனால் இளவரசருக்குரிய பகட்டுகளை துறந்து, தன் சிற்றப்பா மதுராந்தகருக்கு பட்டம் கட்டி விட்டு, சித்தாப்பாவிற்கு சோழ சிங்கதனத்தின் மீது உள்ள ஆசை அகலும் வரை, சோழ சிங்காதனத்தை மனதிலும் நினையேன்‌ என்று அரசபீடத்தை விட்டு விலகி வந்த இளவரசர். இப்போது அவர் அருள்மொழி தெரிஞ்ச கைக்கோளர் படையின் தலைவர் மட்டுமே.  அருள்மொழி மக்களோடு மக்களாக கலந்து பழக விரும்பினார். அதனால் சோழ நாட்டை கடந்தும், பல நாடுகளை சாதாரணனாக அலைந்து திரித்து காலார அந்த தேசங்களை கடந்து மண்ணோடு நேசம் பழகினார். அப்படி தான் காஞ்சிபுரத்தை அடுத்த களக்காட்டூரை சேர்ந்த கூல வாணிபம் செய்யும் காடன்மைந்தனோடு சேர்ந்து மதுரைக்கு தென்மேற்கில் மலை நாட்டுக்கு செல்லும் பொதினி மலை தொடரில் உள்ள ஆரை நாடு வந்து சேர்ந்தார். இடையில் ஒரு யானையின் துரத்தலில் வணிக குழுவை பிரிந்து, இந்த மலை முகட்டில் ஏறும் படி ஆகிவிட்ட