Posts

Showing posts from January, 2024

கேப்டன் மில்லர் திரைப்படத்தின் வரலாற்று பின்னணி

   இந்திய இராணுவத்தின் தந்தை என்றழைக்கப்படும் ஸ்ட்ரிஞ்சர்   லாரன்ஸ் இங்கிலாந்திலிருந்து மெட்ராஸ் (இந்நாள் சென்னை) வந்து ஒரு தரமான படையை கம்பெனிக்காக உருவாக்கினார். 1757 வாக்கில் மெட்ராஸ் இராணுவம் கச்சிதமாக தயாராகி விட்டது. அதே வருடம் ராபர்ட் கிளைவ் தலைமையில் வங்காளத்துக்கு அணிவகுத்து பிளாசி போரில் வெற்றிவாகை சூடியது. 1760ல் எயரி   கூட் தலைமையில் வந்தவாசியை கைப்பற்றியதோடு பிரெஞ்சுக்காரர்களின் நாடு பிடிக்கும் ஆசைக்கு ஒரு முற்று புள்ளி வைத்தது.   அதன்பின்னர் நடந்த போர்களில் மெட்ராஸ் இராணுவத்தின் பங்கு அளப்பரியது. கம்பெனி அரசு இந்தியாவில் அசைக்க முடியாத அளவுக்கு காலூன்றியதில் மெட்ராஸ் இராணுவத்தின் பங்கு மிக அதிகம். முக்கியமாக தாழ்த்தப்பட்டவர்கள் அதிகமா இருந்த படைப்பிரிவுகளே, ஒழுக்கத்துக்கு பேர்போனதாகவும் உத்தரவுக்கு கட்டுப்படுவதாகவும் இருந்ததாக மனஸ் தத்தா குறிப்பிடுகிறார் மதுரை பல்கலைக்கழகத்தில்   உதவி பேராசிரியராக பணியாற்றும்   ஜே பாலசுப்ரமணியன், மெட்ராஸ் இராணுவத்தில் சேருவது   பறையர்கள் சமூகத்தில் உயர உதவியதை சுட்டிக்காட்டுகிறார். தங்களை   அடிமைப்படுத்தி வைத்திருந்த சாதி விலங