Posts

Showing posts from April, 2020

கீதாஸாரம்

கீதாசாரம் நான் புரிந்து கொண்ட வகையில் எல்லாம் மாயை. இங்கு நடப்பது முன்பே நிர்ணயிக்கப்பட்டது. ஆத்மா அழிவில்லாதது; பரிசுத்தமானது. நெருப்பால் எரிக்கவோ அயுதத்தால் வெட்டவோ முடியாதது. பரமாத்மாவின் துளிகள் ஜீவாத்மா. நல்லவன் என்பது வேறு; கடவுளை தேடும் நல்லவன் என்பது வேறு. நீ நன்மை புரிந்தாலும் தீமை புரிந்தாலும் மீண்டும் உன் கர்ம கணக்கை தீர்க்க இந்த பூமியில் பிறந்து தான் ஆக வேண்டும். இது மாயை ஆடும் விளையாட்டு எந்த தெய்வ வழிப்பாடும், பரம்பொருளில் சென்று சேரும். சந்நியாசியை விட இல்லாற தர்மத்தில் இருந்தும் பற்றில்லா வாழ்க்கை வாழும் கர்மயோகி கடவுளுக்கு பிரியமானவன். கலியுகத்தில் இறைவனை அடைய எளிய வழி நாம சங்கீர்த்தனை. மெல்ல அந்த நாமங்கள் சொல்ல சொல்ல தன் எண்ணங்கள் கரைத்து எண்ணமில்லா நிலையை அடைய முடியும். எண்ணமில்லா ஒரு நிலையில் ஜீவாத்மா பரமாத்மாவை அடைகின்றது. * பகவத் கீதை*  *18 ஆம் அத்தியாயம்*  *மோட்ச சந்நியாச யோகத்தின் ஒரு பகுதி* அர்ஜுனா, எல்லா உயிர்களுக்கும் பரம்பொருள் உள்ளத்தில் நிற்கிறான். மாயையால் அவன் எல்லா உயிர்களையும் சக்கரத்திலேற்றிச் சுழற்றுகிறான். அர்ஜுனா, எல்லா வடிவங்களிலும் அவனைய

ஜோதிகாவின் உளறல்கள்

தனிமனித தாக்குதல்களில்  எனக்கு எப்போதும் உடன்பாடு இல்லை. ஆனால் சமீப கால ஜோதிகா பெரிய கோவில் சர்ச்சையை தொடர்ந்து அவரது பழைய வீடியோவை பார்க்க நேர்ந்தது. அதிலும் கோவில்கள் உண்டியலில் போடும் காசை போல அரசு பள்ளிகளுக்கு செலவு செய்யுங்கள் என்று கூறுகின்றார். அரசு பள்ளி, அரசு மருத்துவமனை இரண்டும் அரசு கட்டுப்பாட்டில் வரும். அதில் பொதுமக்கள் நினைத்தவுடன் போய் தானம் செய்ய முடியாது. அரசு அனுமதி வேண்டும். ஆனால் அரசு பள்ளி, அரசு மருத்துவமனை ஆகியவற்றை பராமரிப்பது போன்றவற்றை ஏன் கோவில் உண்டியல் பணத்தோடு முடிச்சு போட்டு கருத்து சொல்ல வேண்டும். அதுவும் தொடர்ந்து இதே போல் பேசி வருவது ஏன்? கோவில்கள் மேல் உள்ள வெறுப்பா? எனக்கு தெரிந்து பலர் அரசு மருத்துவமனை வாசல்களில் அன்னதானம் செய்கின்றனர். ஈரோட்டில் அரசு மருத்துவமனைக்கு அருகில் 1 ரூபாய்க்கு சாப்பாடு கொடுக்கின்றனர் ஒரு தம்பதியினர். நான் பிறந்த ஊரில் அரசு பள்ளி சத்துணவு கட்டிடத்தை நன்கொடை அளித்து கட்டினர் அதன் முன்னாள் மாணவர்கள் பலர். உண்டு உறைவிட பள்ளி குழந்தைகளுக்கு சத்துணவாக பயறு, முந்திரி பருப்பு, முட்டை வகைகளை அனுப்பி வைக்கும் வெளிநாடு வாழ் இந்தியர்க

கோவில்களும் மருத்துவமனையும்

பெரிய கோவில் கட்டிய காலத்திலும் ஆதுர சாலை என்னும் அரசு மருத்துவமனை உண்டு. கோவில்கள் வேறு விதமாக மானுட உதவி செய்கின்றன. இதை உடையாரில் பாலகுமாரன் அழகாக விவரித்து இருப்பார். பெரிய கோவில் கட்டுமானம் மூலம், காசு ஓரிடத்தில் முடங்காமல், காசு புழக்கம் அதிகரித்து, சோழ நாட்டில் ஒரு economical surge ஏற்பட்டது என்று.  கோவில்களையும் மருத்துவமனையும் போட்டு குழப்பி கொள்ளவே கூடாது, இரண்டும் வேறு வேறு வகையில் மனிதருக்கு தேவை. கோவில்கள் இல்லா இந்தியா எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள். கலாச்சார அடையாளம் எதுவும் இல்லா பெரும் நிலப்பரப்பு. கோவில்கள் ஒரு வரலாற்று கடத்திகள். அவை இல்லை என்றால், நம் வரலாறு தெரியாத அனாதைகளாக நின்றிருப்போம இன்றும் புதர் மண்டி காரை பெயர்த்து நிற்கும் சோழ நாட்டு கோவில்கள் பல நான் அறிவேன். வவ்வால் எச்சம் நிறைந்து, இருட்டில் முழ்கி கிடக்கும் அந்த கோவில்களை விட்டு விலகாமல், ஏழ்மை நிலையிலும் அதில்  ஒரு வேளை விளக்காவது போடும் பெரிய உள்ளங்களையும் நான் அறிவேன். அந்த கோவில்களின் காரை விழ்ந்த சுவர்களில் விழாமல் ஒட்டிக்கொண்டு உள்ளது பழைய வரலாறு. அதில் அந்த கோவிலை அல்லும் பகலும

இராமானுசர்

இன்று சித்திரை திருவாதிரை இராமானுஜர் அவதார திருநாள். த்வைதம் அத்வைதம் தாண்டி, பரந்தாமனே, சகல ஜீவ ராசிகளில் நிறைந்து உள்ளான். அந்த  பரமாத்மாவின் துளி தான் ஜீவாத்மா, பரமாத்மாவை அடைவதே ஜீவாத்மாவின் நோக்கம் என விசிட்டத்வைத தத்துவம் கண்டவர்.அவருக்கு சைவத்தின் மேல் தூஷனை இல்லை. அவரை பொறுத்தவரை பரம்பொருள் என்பது,பெருமாள் தான். வைணவத்திற்கும், சைவத்திற்குமான வேறுபாடு, ஜீவாத்மாவும் பரமாத்மாவும் ஒன்று என்பது சைவம். உள்கிட என்பதே வெளியில் கடவுள் என்பது அதன் தத்துவம். வைணவம் பரமாத்மாவின் துளி ஜீவாத்மா. அந்தரியாமி ஆக உள்ளத்தில் கடவுள் வெளிப்பட்டாலும் இரண்டும் வேறு என்பது வைணவ தத்துவம். ஆனால் இரண்டிற்கும் பிறருக்கு துன்பம் விளைவிக்கா சாத்வீகமே அடிப்படை. சைவம் கூட காபலிகம் என ஆக்ரோஷ வடிவம் கண்டது. ஆனால் வைணவம் சாத்வீகமானது. அந்த அமைதியை, சாத்வீக குணத்தை  கெட்டியாக பிடித்து கொண்டவர் ராமானுஜர். அதனால் தான் தனக்கு விஷம் வைத்தவர்களிடம் கூட அவருக்கு கோபம் இல்லை. என் மனதுக்கு உகந்த குரு அவர்.  இராமானுஜர் வரலாற்றை அறிய படிக்க வேண்டிய நூல், பா. ராகவனின் பொலிக பொலிக! மிகைப்படுத்துதல் இல்லா எழுத்து நடை. உடையவ

அனுபவம்

இன்னிக்கு ஒரு அதிசயம் பரந்தாமன் என் வாழ்வில் நடத்தினான். தொடர் ஊரடங்கு, கொரானா பயம் என மிகுந்த மன அழுத்தத்தின் காரணமாக, மூன்று நாட்களாக தூக்கம் பிடிக்காமல் தலை பாரம் ஏறி போய் கிடந்தேன்.  தூங்கியே ஆக வேண்டும். ஆனால் தூக்கம் வரவில்லை. எனக்கு அழுத்தம் கூடும் போது எல்லாம் கிருஷ்ணரை அதுவும் குருவாயூர் கிருஷ்ணரை சரணடைவேன். இது என் பிறவி இயல்பு. அப்படி தான் அவனிடம் புலம்பினேன். கிருஷ்ணா உன் கரம் எந்தும் தாமரை மேல் தேன் குடித்து மயங்கும் வண்டை போல, என்னையும் உறங்க செய்வாயா என. புலம்பலில் ஊடே அயர்ந்து தூங்கி விட்டேன். தாய் கருவறை இருட்டை போல கனத்த அமைதியில் சிந்தனை எதுவும் இல்லா ஆழ்ந்த தூக்கம். எழுந்ததும் மிகவும் புத்துணர்ச்சி ஆக எழுந்தேன். வெறும் அரை மணி நேர உறக்கம்,3 நாட்கள்  தூங்காத தூக்கத்தை ஈடு செய்தது. சிலருக்கு இது பேத்தலாக தெரியும். ஆனால் என் அனுபவம் இது. அழைத்தவுடன் ஓடி வரும் பரம்பொருள் அவன். பூசனைகள் தேவை இல்லை அவனுக்கு அன்பு ஒன்றே போதும்.

ஒரு பட்டாம்பூச்சியின் கதை

*ஒரு பட்டாம்பூச்சியின் கதை* இப்படி தலைப்பு வைத்தால், ஒரு பெண்ணின் கதை என்று தானே நினைப்பீர்கள். ஆனால் இல்லை இது ஒரு நிஜ பட்டாம்பூச்சியின் கதை. அவள் பெயர் குழலி. ( பாலினமும் பெயரும் மனிதருக்கு மட்டும் தானா😉) அழகர் மலையில் அவள் குடியிருப்பு. உங்களுக்கு தெரியுமா? குழலியின் முன்னோர்கள் இலங்கையில் இருந்து வந்தவர்கள்😄😄. ஆம் ஒரு பட்டாம் பூச்சி 3000 கிமீ பறக்கும். ஆண்டு தோறும், ஈழத்தில் இருந்து 70 வகையான பட்டாம்பூச்சிகள் மதுரை வரும். குழலிக்கு ஒரு வயதாக போகிறது. அதன் ஆயுள் முடிய போகிறது. அழகனை தினமும் கண்டாலும் அவளுக்கு ரங்கனை பார்க்க ஆசை. அவளின் அம்மா காவிரி கரை காடுகளை பற்றி பேசி கொண்டே இருப்பாள். குழலியும் கிளம்பி விட்டாள் ஸ்ரீரங்கம்  நோக்கி. ஆனால்? போகும் வழியெல்லாம் மனிதர்களை அரிதாகவே கண்டாள். என்னாயிற்று இந்த மனிதர்களுக்கு ? மனிதர்களை குழலிக்கு பிடிக்காது. அழகான இந்த பூமியை நாசம் செய்கின்றார்கள் என தோன்றும். அவளின் அப்பாவை ரெக்கையை கட்டி காயப்படுத்தி கொன்றான் ஒரு பொடியன். மனிதர்கள் என் குழந்தைமையில் கூட இரக்கம் அன்று திரிக்கின்றார்கள் என்று தோன்றும் குழலிக்கு. ஸ்ரீரங்கம் வந்துவிட்

வீரபாண்டியன் வாள் ( குறு நாவல்)

*வீரபாண்டியன் வாள்* காவிரிக்கும் கொள்ளிடத்திற்கும் நடுவில் உள்ள கானகத்தில் நதியை ஒட்டி, மண் சாலையில் விரைந்து கொண்டு இருந்தது ஒரு வெண் புரவி. புரவியின் மீது ஆரோகணத்து இருந்தவன் பரமன் மழபாடி, சோழ மறவர் குடி வீரன். முகத்தில் சிரிப்பு இல்லை, கவலைகளின் கோட்டோவியம். அந்தி மயங்கும் வேளை. காவிரியும் கொள்ளிடமும் வகுத்த நீர் கரையின் நடுவில் செழித்து வளர்ந்து இருந்தது அந்த காட்டு பகுதி. குணசீலத்தை கடந்தான். சிந்தையில் கொங்காள்வார் செய்தி எதிரொலித்து கொண்டே இருந்தது. ஆதித்த கரிகாலன் கொலையில் சேரர் தொடர்பு. இருப்பதாகவும், பாண்டியர் போர்வையில் முதுகில் குத்திய சேரர்கள்.என செய்தி அனுப்பி இருந்தார். என்ன ஒரு ஈன புத்தி. வீரனை போரில் கொல்ல முடியாமல் சூதில் கொன்றனர். சேரரை பற்றி,குறிப்பாக அந்த முன்குடுமி நம்பூதிரிகள் பற்றி அருவருப்பு மண்டியது மனதினுள். சோழ தேசம் இப்போது முன்குடுமி நம்பிகள்  ராஜ்ஜியம் ஆகிவிட்டது . விஜயாலய சோழரின் பேரன் பராந்தகன் பொற் கூரை வேய்த தில்லையி இப்போது அவர்கள் ராஜ்ஜியம் தான். பொது மக்களை அனுமதிப்பது இல்லை.  இவர்கள் கொட்டத்தை ஆட்சி செய்யும் உத்தம சோழனும் கண்டு கொள்வது இல்லை.