Posts

Showing posts from May, 2019

மங்கயற்கரசி

"மங்கையர்க் கரசி வளவர்கோன் பாவை வரிவளைக் கைம்மட மானி பங்கயச் செல்வி பாண்டிமா தேவி பணிசெய்து நாடொறும் பரவப் பொங்கழ லுருவன் பூதநா யகனால் வேதமும் பொருள்களும் அருளி அங்கயற் கண்ணி தன்னொடும் அமர்ந்த ஆலவா யாவதும் இதுவே. " மங்கையர்கரசி வளவர் கோன் பாவை, பங்கய செல்வி பான்டிமாதேவி என்று ஆளுடைய பிள்ளை, திருஞான சம்பந்தர் கூவி அழைக்கின்றாரே ! அந்த மங்கையர்கரசி பற்றி, சோழ நாட்டில் பிறந்து, பாண்டிய நாட்டில் புகுந்த அந்த பாண்டிமாதேவியின் வரலாற்றை பார்ப்போமா? உறையூரின் மணிமுடி சோழருக்கு கி. பி. 630 காலக்கட்டத்தில் மகளாக அவத்தரித்தவள் மானி. அப்போது மதுரையை ஆண்ட கூன் பாண்டியன் என்னும் நின்ற சீர் பாண்டியன் உறையூர் மீது போர் தொடுத்து, ஒரே நாளில் சோழ மன்னரை விழ்த்தி, போர் பரிசாக மானியை திருமணம் செய்துக் கொண்டான். இதனால் சோழ பாண்டிய உறவு மலர்ந்தாலும், ஒரு சிக்கல் எழுந்தது. வழி வழியாக சிவனை வழிபட்டு வந்த இளவரசி மானி. ஆனால் அவளது கணவன் நின்ற சீர் நெடுமாற பாண்டியன் சமண மதத்தை மேற்கொண்டார். மன்னன் எவ்வழியோ மக்களும் அவ்வழி. அன்னை மீனாட்சியின் வழி வந்த பாண்டியர் குலம், சைவத்தை துறந்து சமணத்தை ஏற்றதா

ஆதித்த கரிகாலன் கொலை வழக்கு ( பகுதி6)

ஆதித்த கரிகாலன் கொலை குற்றவாளி குந்தவையா?குந்தவை சோழரது புகழ் பெற்ற மன்னருள் ஒருவனான முதலாம்  இராஜராஜனின்  தமைக்கையும்,  ஆதித்த கரிகாலனின்  தங்கையும், சுந்தர சோழரின்  மகளுமாவாள்.  திருச்சி மாவட்டம் பாச்சல் என்ற ஊரில் உள்ள கல்வெட்டும், வேலூர் மாவட்டம் அ வனிஷ்வரம் அருகில் உள்ள கல்வெட்டு குந்தவை பிறந்த அவிட்டம் நட்சத்திரத்தில் சிறப்பு பூஜைகள் செய்ய ராஜ ராஜ சோழன் உத்தரவிட்டார் என்பதை தெரிவிக்கிறது. சோழர்களின் மாதண்ட நாயக்கர்களுள் ஒருவரும்  வாணர்  குலத்து குறுநில மன்னனுமான  வல்லவரையன் வந்தியத்தேவனை  மணமுடித்தவள்.  இராஜராஜனின்  ஆட்சிக் காலத்தில் மதிப்புடன் இருந்ததாகவும் பல தானங்கள் தருமங்கள் செய்திருக்கிறாள் என்றும்  முதலாம் இராஜராஜனின்  கல்வெட்டுக்கள் மூலம் தெரியவருகிறது. இராஜராஜனின் தந்தையின்  பெயரால் அமைக்கப்பட்ட "சுந்தர சோழ விண்ணகர்" என்னும் விஷ்ணு கோயிலில் ஒரு மருத்துவமனை இருந்து வந்துள்ளது, அந்த மருத்துவமனைக்கு குந்தவை பிராட்டி பல தானங்கள் வழங்கியிருக்கிறார் என்று கல்வெட்டுக்கள் மூலம் அறியமுடிகிறது. இராஜராஜனின் 17-ம் ஆண்டில்(கி.பி. 1002ல்) ஒரு பொதுக்கட்டளை பிறப்பிக்கப்பட்ட

ஆதித்த கரிகாலன் கொலை வழக்கு ( பகுதி5)

வீரபாண்டியனுக்கும், காந்தளூர் சாலைக்கும் உள்ள தொடர்பை அறிய வீரபாண்டியன் பூர்வீகத்தை அறிய வேண்டும். வீரபாண்டியன் தந்தை மூன்றாம் ராஜசிம்மன். மூன்றாம் இராசசிம்ம பாண்டியன் கி.பி. 900 முதல் 946 வரை பாண்டிய நாட்டை ஆட்சி செய்த பாண்டிய மன்னனாவான். பராந்தக பாண்டியனுக்கும், சேர நாட்டு இளவரசி வானவன்மாதேவிக்கும் மகனான இவன் கி.பி. 900 ஆம் ஆண்டில் முடிசூடிக்கொண்டான். சடையன் மாறன், இராச சிகாமணி, சீகாந்தன், மந்தரகௌரவமேடு போன்ற பட்டங்களினை உடையவனாவான். பிரம்மதேயம், தேவதானம், பள்ளிச்சந்தம் ஆகிய அறச்செயல்களை அதிக அளவில் செய்தவன் என்ற பெருமையினை உடையவனும் ஆவான். வெள்ளூர்ப் போரின் பின்னர் மூன்றாம் இராசசிம்மன் இலங்கையில் சென்று வாழ்ந்தான். பாண்டிய நாட்டினை மீட்டெடுக்கப் பல முயற்சிகள் செய்தும் தோற்றான். ஐந்தாம் காசிபனிடம் பாண்டிய நாட்டின் மதிப்பிற்குரிய சுந்தரமுடியையும், வாள், குடையையும் அளித்துத் தன் தாயான வானவன் மாதேவி பிறந்த சேர நாட்டிற்குச் சென்று தன் இறுதிக் காலத்தினைக் கழித்தான். மூன்றாம் இராசசிம்மன் கி.பி.946 ஆம் ஆண்டில் இறந்தான். பாண்டிய நாடும் இவனது ஆட்சியின் பின்னர் வீழ்ச்சியுற்றது. வீரபாண்டியன்

ஆதித்த கரிகாலன் கொலை வழக்கு ( பகுதி4)

முதலாம் பராந்தகன் ஒரு கேரள இளவரசியை திருமணம் செய்ததாக உதயேந்திரம் செப்பேடுகள்  கூறுகின்றது. லால்குடி சப்தரிஷி ஈஸ்வரர் கோவிலில்  கண்டு எடுக்கப்பட்ட கல்வெட்டு சேரமான் மகளார் கோக்கிழானடிகள் சார்பில் கொடுக்கப்பட்ட நந்தா விளக்கு தானம் பற்றி குறிப்பிடுகிறது. முதலாம் பராந்தக சோழனின் பட்டத்தரசியின்  முழு பெயர் கோக்கிழனடிகள் ரவிநீலி ஆகும். ஆதித்த கரிகாலன் கொலை குற்றவாளிகளில் முதல் குற்றவாளி பெயர்ரவிதாசன் ஆகும். அந்த ரவி நீலியின் தாசன் ரவிதாசனோ? ஆதித்த கரிகாலனின் குற்றவாளிகள் இருந்த இடம் வீரநாராயன சதுர்வேதி மங்கலம். சோழ மன்னர் முதலாம் பராந்தகச் சோழன் (907-935) "வீர நாராயண சதுர்வேதி மங்கலம்' என்ற பெயரில் ஒரு ஊரினை உருவாக்கினார். (வீர நாராயணன் என்பது அவரது சிறப்புப் பெயர்) அதுவே இன்று காட்டு மன்னார்கோயில் என்று அழைக்கப்படுகிறது. இந்த ஊருக்கு அருகிலேயே அவருடைய மகன் ராஜாதித்திய சோழனால் விவசாயிகளின் நலன் கருதி, "வீர நாராயணன் ஏரி' என்ற பெரிய ஏரி ஒன்று வெட்டப்பட்டது! அந்த ஏரிதான் இன்று "வீராணம் ஏரி' என்று அழைக்கப்படுகிறது. எனவே புதிதாக உருவாக்கப்பட்ட சதுர் வேதிமங்கலத்தில்

ஆதித்த கரிகாலன் கொலை வழக்கு (பகுதி 3)

பஞ்சவன் பிரம்மாதிராஜன் : உடையார்குடி கல்வெட்டில் ஆதித்த கரிகாலனை கொன்றதாக வரும் நால்வரில் ஒருவனான ரவிதாசனின் பட்டம்  பஞ்சவன் பிரம்மாதிராஜன். கன்னியாகுமரி மாவட்டம் பார்த்திவபுரத்தில் 923 ம் ஆண்டைச்சேர்ந்த கல்வெட்டு ஒன்றில் பஞ்சவன் பிரம்மாதிராஜனான குமரன் நாராயணன் என்பவர் இவ்வூர் இறைவனுக்கு இரண்டு நந்தாவிளக்கு தானமளிக்கிறார். இந்த கோவில் ஆய் மன்னன் கருநந்தடதக்கனால் கட்டப்பட்டது. இம்மன்னரது பார்த்திவசேகரபுர செப்பேட்டில் காந்தளூர் சாலை போல  பார்த்திவசேகரபுரத்தில் நான்கு சாலைகளை நிர்மாணித்ததாய் கூறுகிறார். திருநந்திக்கரையிலுள்ள இவரது மகனான விக்ரமாதித்ய வரகுணனும், மன்னரின் பெயர் இல்லாத மற்றொரு கல்வெட்டும் சாலை களமறுத்தளிய ஆண்டு என கூறுகிறது!  எழுத்தமைதி வைத்து இவை பத்தாம் நூற்றாண்டு என கணிக்கின்றனர். இராஜராஜன் தன் இரண்டாம் ஆட்சியாண்டில் ஆதித்த கரிகாலனை கொன்றதாக குறிப்பிடும் நால்வர் பெயரின் பட்டமும் இவர் பெயரின் பட்டமும் ஒன்று.  இருவரையும் இணைக்கும் இணைப்பு புள்ளி கல்வெட்டில் இல்லை எனினும் ஏதோ தொடர்பு நூலிழையாய் ஆடுகிறது. காந்தளூர் சாலைப் பற்றி இன்னும் தெளிவு பெற கேரள நம்பூதிரி பிராமணர்களை