Posts

Showing posts from September, 2022

என் பார்வையில் பொன்னியின் செல்வன் -1 திரைப்படம்

புகழ்ப்பெற்ற வர்ணனை மிகுந்த சரித்திர  நாவலை விறுவிறுப்பான திரைப்படம் ஆக்குவதும் , நாவலை படித்தவர்களின் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்வதும் இமாலய சாதனை தான். பொன்னியின் செல்வன் முதல் பகுதி அதை நிறைவேற்றி உள்ளதா என்றால், என்னை பொறுத்தவரை 70% நிறைவேற்றி உள்ளது என்பேன். முதலில் தொய்வாக நகரும் திரைப்படம் இடைவேளை நெருங்கும் போது வேகமெடுத்து, இரண்டாம் பகுதி ஒரு பரபரப்பான ஆக்‌ஷன் படமாக திரைக்கதை தீயின் வேகத்தில் பயனிகின்றது. நாவலை திரைக்கதைக்காக சில மாற்றங்கள் செய்துள்ளார் அதுவும் நன்றாக இருக்கின்றது வசனங்களை குறைத்து, பார்வைகளாலும், பின்னனி இசையாலுமே பல விஷயங்களை கடத்தி உள்ளது நன்றாக இருக்கின்றது. பிறகு என்ன 30% குறை என்கிறீர்களா? கல்கி பொன்னியின் செல்வனை கல்கி வராந்திர தொடராக எழுதியதாலும் ஒவ்வொரு அத்தியாயமும் ஒரு ட்விஸ்ட்டுடன் முடிய வேண்டும் என்று non linier பாணியில் சொல்லி இருப்பார். சம்பவங்கள்  தொடர்பு இல்லாமல் தொக்கி நிற்கும் போது “ அவரே கதை சொல்லியாக “நம் கதாநாயகனை விட்டு விட்டு வந்து விட்டோம்” என்பது போல் தொடங்கி தொடர்பு படுத்திவிடுவார். இந்த யுத்தி தான் kgf படத்தில் பயன்படுத்தப்பட்டது.