Posts

Showing posts from March, 2021

உலக வன நாள்

இன்று உலக வன நாள். காடுகள் இன்றி அமையாதது உலகு. காடுகளின் ராஜா சிங்கம் என்றாலும், என்னை பொருத்தவரை காடுகளின் பிதாமகன் யானை தான். யானை, தனது வலசை பாதையில், தன் சாணத்தின் மூலம் ஒரு நாளைக்கு 30 கிலோ மீட்டர் அளவிற்கு, வனப்பரப்பின் எல்லையை விஸ்தரிக்க, விதைகள் தூவி செல்லும் . வேழக்காடுகள் என்றே ஊட்டி மலை பகுதியை பழம் கல்வெட்டுகள் குறித்து இருக்கின்றன. ஓடுகின்ற நதிகளின் மூலம் எல்லாமே காடுகள். காடுகள் அழிந்தால், நீரும் உணவும் இன்றி பஞ்சத்தில் மாள வேண்டியது தான். அடர்த்தியான வேழ காடுகள் மட்டும் அல்ல, கடற்கரை ஓரம் வளரும் குட்டை மரங்கள் உள்ள அலையாத்தி காடுகள், ஊசி முனை காடுகள் என காடுகளிலும் எத்தனை வகை.  தனிப்பட்ட முறையில் எனக்கு காடுகளின் அமைதி, தாய்மடியை போன்றது. மதுரையில் இருக்கும் போது பழமுதிர்ச்சோலை அடிக்கடி செல்வது வழக்கம். சூரிய ஒளிக்கூட எளிதாக ஊடுருவமுடியாத பழமுதிர்ச்சோலை மலையும், அங்கே ஓடி விளையாடும் வானரங்களும், தனி சந்நிதி கொண்டுள்ள வேலும் என்னை சங்க காலத்திற்கே அழைத்து போய்விடும். சங்க கால வேல் கோட்டத்திற்கு இன்றும் சாட்சியாய் இருப்பது பழமுதிர்சோலையும், சாளுவகுப்பம் முருகன் கோவிலும் த

பெண் என்னும் பராசக்தி

வேதாந்தம் அடிப்படையில் எல்லாமே ஜீவாத்மா என்னும் போது ஆண் என்ன? பெண் என்ன? எல்லாமே ஒளியின் துளி அல்லவா என்று தோன்றினாலும் உடல் கூறு அடிப்படையில் உடலின் ஆறு சக்கரங்களை தூண்டி விடுவது ஒரு பெண்ணிற்கு கடினம் தான். ஆனால், ஹடயோகத்தின் மூலம் இதை பெண்ணை விட ஆண் , எளிதாகவே செய்ய முடியும். மூலாதார சக்கரத்தை உச்சியில் நிறுத்தி, சகஸ்கரஹாரத்தில் பிரபஞ்சத்துடன் தொடர்பு கொள்வதே யோக நிலை. இது பெண்ணுக்கு எளிதல்ல. ஏன்? இந்த பராபட்சம் என எண்னும் போது எனக்குள் தோன்றிய விடை பெண் படைப்பின் மூலம். கருப்பை என்னும் இருளின் சக்தி அவள். இருளில் இருந்தே ஒளி தோன்றுவதால் அவளுக்கு யோகநிலையின் சகஸ்கரஹார பிரகாசம் தேவை இல்லை. என்னெனில் எல்லா பிரகாசத்தின் ஒளிப்புள்ளியும் காரிருளில் தோன்றுபவையே.

மகளிர் தினம்

மகளிர் தினம் என்பதே மேற்கத்திய சிந்தனை தான். தமிழ் சமூகத்தின் பெண்கள் பற்றி நினைத்து பார்க்கின்றேன். சங்க காலத்தில் காக்கைபாடினியர், அவ்வையார் போன்ற பெண் பால் புலவர்கள் இருந்தார்கள். தமிழ் சமூகம் பெண்களை அடிமை படுத்த வில்லை.  அதனால் தான் ஒரு மன்னனின் அவையில் சாதாரண பெண், அதுவும் வேறு நாட்டு பெண் தன் கணவன் மரணம் குறித்து கேள்வி எழுப்பி நியாயம் கேட்க முடிந்தது.   அடல்மகளிர் கொடுத்த பல தானங்கள் குறித்து பல கல்வெட்டுகள் உள்ளன. அவர்களும் தனக்கு பிடித்த ஒருவனை கணவராக ஏற்று அவனோடு வாழ்ந்தார்கள். உதாரணம் கோவலன், மாதேவி. இடைக்காலத்தில் கூட பெண்கள் அதிகாரிச்சிகளாகஆக அரசு அமைப்பில்‌ அதிகாரம் செலுத்தி உள்ளார்கள்.‌தாய் வழி சமூகமான‌ தமிழ்‌ சமூகம் என்றும் பெண்ணை ஏத்தியே தொழுதுள்ளது. கொற்றவை என அன்னையரில் மூத்தவள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளாள். குமரியாகவும் அவள் வணங்கப்பட்டுள்ளாள்.‌ உறையூரில் வெக்காளி அம்மன் கோவிலும், கமலவள்ளி நாச்சியார் கோவிலும் எல்லாருக்கும் தெரியும். செல்லாண்டி அம்மன்‌ பற்றி சிலருக்கு தான் தெரியும். யதார்த்தமாக அந்த‌ கோவில் பற்றி தெரியாமலேயே அங்கு சென்று நின்றேன். சேர, சோழ, பாண்டியரு