பொன்னியின் செல்வன்
மூவேந்தர்களில் மற்ற இரு வேந்தர்களை விட, தற்காலத்தில் சோழர்களின் வரலாறு,அதிகம் கொண்டாடுப்படுவதற்கு முக்கிய காரணம் பொன்னியின் செல்வன் தான். இதை யாரும் மறுக்க முடியாது. ஆனாலும், பாண்டியர்களையும் நாவல் தலைவராகளாக கொண்டு, தீபம் நா. பார்த்தசாரதியும், சாண்டியல்யனும் பல நாவல்கள் எழுதியுள்ளனர்.ஆனாலும் பொன்னியின் செல்வன் பெற்ற கவன ஈர்ப்பையும் , கொண்டாட்டத்தையும் அந்த நாவல்கள் பெறவில்லை. பொன்னியின் செல்வனின் மாபெரும் வெற்றிக்கு,கல்கியின் எழுத்து வன்மை காரணம் என்றாலும், அவர் எடுத்துக் கொண்ட கதைக்களமும் ஒரு முக்கிய காரணம். ஆயிரம் ஆண்டுகளையும் தாண்டிய நீண்ட நெடிய வரலாறு கொண்ட, சோழ பேரரசின் வரலாற்றில், ஒளி மிகுந்த, எழுச்சியான காலக்கட்டம் கிபி 950- 980 கிபி. இதை கல்கியே நாவலில் , சோழ சம்ராஜ்ஜியம் இப்போது ஆடி புனல் போல் பல்கி பெருகும் காலக்கட்டம் என்று சொல்லி இருப்பார். எழுச்சி என்று ஒரு இருந்தால், போட்டியும் பொறாமையும் சேர்ந்தே வளரும் .சோழ சம்ராஜ்ஜியம் வளர்ந்து கொண்டு இருந்தாலும், கிபி 949- கிபி 962 13 வருடங்களில், கண்டாராத்தித்தர், அரிஞ்சயர், சுந்தரசோழர் என மூன்று மன்னர்களை கண்டதும், சுந்தர சோழர