பாலகுமாரன்

முதலில் நான் வாசித்த பாலகுமாரனின் நூல் உடையார். அப்போது வயது 20. பொன்னியின் செல்வனை தொடர்ந்து, சோழர் பித்து தலைக்கு ஏறி சோழர் குறித்த சரித்திர நாவல்கள் வாசிக்க ஆரம்பித்த போது , உடையாரை வாசித்தேன். வாசிக்க ஆரம்பித்த புதிதிதில் அவரது  எழுத்து நடை single sentence making ஆக இருக்கிறது, அலுப்பு ஊட்டுகிறது என எனது blog ல் கிண்டல் செய்து பதிவு இட்டு இருக்கின்றேன்.  அவர் எழுத்தின் கணத்தை புரிந்து கொள்ள
முடியாத வயது அது. 23வயதில் அப்பாவை இழந்து, ஒரே பெண்ணாக தவித்து கிடந்த போது, அவரது எழுத்து எனக்கு வேறு பரிமாணத்தை காட்டியது.
சோகத்தில் உழன்று கிடந்த என்னை தூக்கி நிறுத்தியது அவரது எழுத்து. வாழ்க்கை இதனோடு நிற்காது. எழு, ஓடு என உத்வேகம் அளித்தது அவரது எழுத்து.உன்னுடைய சோகத்தை, அழுகையை மற்றவரிடம் காட்டாதே . அதில் சிலருக்கு அக்கறையில்லை, சிலருக்கு அதில் சந்தோஷம். அழுகையோ அவமானமோ மனதில் நிறுத்தி வாழ்க்கையை நடத்து என்று கற்று தந்தவர் அவர். சென்னை செல்லும் போதெல்லாம் மயிலாப்பூர் வாரன் ரோட்டில் உள்ள அவரது வீட்டை வெளியில் இருந்து பார்த்து விட்டு வருவேன். அவர் நேரில் வாசகர்களை சந்திக்கும் பழக்கம் கொண்டவராக இருந்த போதும் ஏனோ நெருங்கி சென்றது இல்லை. அவர் இறந்த அன்று மீண்டும் ஒரு ஞான தகப்பனை இழந்தது போல் மனம் கனத்தது. ஆனால் அதையும் கடந்து வரும் வாழ்வின் நிலையாமையை போதித்த ஆசான் அவர்.
சித்த பெருமக்கள் உடல் நீக்கியும் சூட்சமமாக வாழ்வார்களாம் அது போல எழுத்து சித்தரும் நிலை பெற்று வாழ்வார் அவரது எழுத்துக்களில்..
பாலகுமாரம் போற்றி🙏🏻🙏🏻🙏🏻
#பாலகுமாரன்
#2வது_நினைவு_தினம்

Comments

Popular posts from this blog

ஆதித்த கரிகாலன் கொலை வழக்கு ( பகுதி4)

ஆதித்த கரிகாலன் கொலை வழக்கு

ஆதித்த கரிகாலன் கொலை வழக்கு ( பகுதி5)