ஐப்பசி சதய விழா
இன்று ஐப்பசி சதய விழா.. எனக்கு சிறுவயத்தில் இருந்தே சரித்திரம் மிகவும் பிடிக்கும். கடந்த தலைமுறையின் அனுபவம் வரும் தலைமுறைக்கு பாடம் என நம்புகின்றேன். சரித்திர பக்கங்களில் என்னை மிகவும் கவர்ந்த மன்னர் ராஜராஜ சோழன் . நிர்வாகதிறனும் ஆளுமையும், பெருந்தன்மையும் இறை உணர்வும் இறை தேடலும் கொண்ட மன்னன் ராஜராஜர். ஆட்சி பீடம் ஏற சொந்த சகோதரர்களை பலி கொடுத்த மன்னர்கள் சரித்திரத்தில் உண்டு. ஆனால் நாடு நகரம் மக்கள் அனைவரும் முடி சூட்டி கொள்ள வற்புறுத்தி இளமையில் ஆட்சி பீடத்தை கையில் கொடுத்தும், தன் ஒன்று விட்ட சித்தப்பாவிற்கு ஆட்சி மீது ஆசை என்பதால் விட்டு கொடுத்து அவர் காலத்திற்கு பின் 15 ஆண்டுகள் கழித்து தன் மத்திய வயதில் தான் சோழ அரசாட்சியை ஏற்றுக் கொண்டார் என திருவாலங்காடு செப்பெடுகள் கூறுகின்றன. அடுத்து பழம்பெருமை பேசாமல் செயல்திறனை காட்டியது. முதலாம் ராஜராஜர் வரை சோழ மன்னர்கள் கல்வெட்டு சூரிய குல தோன்றல் என் அரம்பித்து மனுநீதி சோழன் சிபி சக்கரவர்த்தி, கரிகால் சோழன் என முற்கால சோழரின் பெருமை பேசி தான் ஆரம்பிக்கும் . அதில் முக்கால்வாசி புராண கதை கலந்து இருக்கும். ராஜ ராஜர் தான...