Posts

Showing posts from 2026

வீரபாண்டியன் வாள் ( குறு நாவல்)

*வீரபாண்டியன் வாள்* காவிரிக்கும் கொள்ளிடத்திற்கும் நடுவில் உள்ள கானகத்தில் நதியை ஒட்டி, மண் சாலையில் விரைந்து கொண்டு இருந்தது ஒரு வெண் புரவி. புரவியின் மீது ஆரோகணத்து இருந்தவன் பரமன் மழபாடி, சோழ மறவர் குடி வீரன். முகத்தில் சிரிப்பு இல்லை, கவலைகளின் கோட்டோவியம். அந்தி மயங்கும் வேளை. காவிரியும் கொள்ளிடமும் வகுத்த நீர் கரையின் நடுவில் செழித்து வளர்ந்து இருந்தது அந்த காட்டு பகுதி. குணசீலத்தை கடந்தான். சிந்தையில் கொங்காள்வார் செய்தி எதிரொலித்து கொண்டே இருந்தது. ஆதித்த கரிகாலன் கொலையில் சேரர் தொடர்பு. இருப்பதாகவும், பாண்டியர் போர்வையில் முதுகில் குத்திய சேரர்கள்.என செய்தி அனுப்பி இருந்தார். என்ன ஒரு ஈன புத்தி. வீரனை போரில் கொல்ல முடியாமல் சூதில் கொன்றனர். சேரரை பற்றி,குறிப்பாக அந்த முன்குடுமி நம்பூதிரிகள் பற்றி அருவருப்பு மண்டியது மனதினுள். சோழ தேசம் இப்போது முன்குடுமி நம்பிகள்  ராஜ்ஜியம் ஆகிவிட்டது . விஜயாலய சோழரின் பேரன் பராந்தகன் பொற் கூரை வேய்த தில்லையி இப்போது அவர்கள் ராஜ்ஜியம் தான். பொது மக்களை அனுமதிப்பது இல்லை.  இவர்கள் கொட்டத்தை ஆட்சி செய்யும் உத்தம சோழனும் கண்டு கொள்வது...

காந்தளூர் சாலை கலமறுத்தல்

காந்தளூர்ச் சாலை கலமறுத்தல்   நான் சோழ வரலாற்றில் , குறிப்பாக முதலாம் இராஜராஜ சோழரின் வரலாற்றில் மிகுந்த ஈடுபாடு கொண்டவள். எனது பணியின் காரணமாக நாஞ்சில் நாட்டில் வசிக்கும், இந்த காலகட்டத்தில்  இந்த மண்ணோடு ஏற்பட்ட நெருக்கமே, காந்தளூர்ச் சாலை கலமறுத்தல் என்ற இராஜராஜ சோழனின் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பற்றி  எழுத வேண்டும் என்ற எண்ணத்தை எனக்குள் உருவாக்கியது. பார்த்திவபுரம், விழிஞ்ஞம், காந்தளூர் போன்ற இடப்பெயர்கள், ஆய் அரசர்கள், பாண்டியர்கள், சேரர்கள், சோழர்கள் ஆகியோரின் நீண்ட அரசியல் தொடர்புகளை நினைவூட்டுகின்றன. அந்த வரலாற்றின் மையத்தில் நிற்கும் புகழ்பெற்ற கல்வெட்டு வரி:  “காந்தளூர்ச் சாலை கலமறுத்தருளிய ஸ்ரீராஜராஜதேவர்.” முதலாம் இராஜராஜர் தன் மெய் கீர்த்தி யில் முதலில் குறிப்பிடுவது காந்தளூர் சாலை கலமறுத்த நிகழ்வு தான். காந்தளூர் சாலை பற்றிய வரலாற்றின் பக்கங்களை ஆராய்ந்தால், அது பண்டைய ஆய் வேள் அரசர்களுடன் தொடர்பு உடையது. இன்றைய கன்னியாகுமரி மற்றும் தென் கேரளப் பகுதிகளை உள்ளடக்கிய இந்த நிலப்பரப்பு, கிழக்கு–மேற்கு மலைப்பாதைகளுக்கும் மேற்குக் கடற்கரைக்கும் இடையே ...

திருமுறை கண்ட சோழர்.

சோழப் பேரரசின் கொடி வெற்றிக் காற்றில் பறந்துகொண்டிருந்த காலம் அது. மிக சமீபத்தில் தான் சோழ தேசம், திருப்பதியை சுற்றி இருந்த சீட் புலி நாடு, நுளம்ப தேசம் ஆகியவற்றை வெற்றி கொண்டு இருந்தது. அந்த வெற்றியில் முக்கியப் பங்கு வகித்தவர் பரமன் மழபாடியார். மன்னர் இராஜராஜ சோழனுக்கு நெருக்கமான வீரத் தலைவன் மட்டுமல்ல; இளவரசி குந்தவைப் பிராட்டியாருக்கும், அவரது கணவர் வந்தியத்தேவனுக்கும் மிகவும் நெருக்கமானவர். நுளம்ப தேச வெற்றிக்குப் பின்னர், அந்த வெற்றியை அளித்த அவரது இஷ்ட தெய்வத்திற்கு நேர்த்தி கடன் நிறைவேற்றும் பொருட்டு பரமன் மழபாடியார் காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் திருக்கோயிலில் ஜஜ்ஜந்தி துர்க்கைக்கு ஆயிரம் ஆடுகளை சாவா மூவா பேராடுகளாக காணிக்கையாக அளிக்க முடிவு செய்தார். அந்த விழாவிற்காக அவருடைய மனைவி கங்கம்மாளும் உடன் வந்திருந்தாள்.கங்கம்மாளின் பிறப்பிடம் தில்லைச் சிதம்பரம். ஆனால் அவளது பிறப்பின் பெருமை தில்லைவாசி என்பதோடு முடிந்துவிடவில்லை. அவள் வந்த மரபின் நினைவு இன்னும் தொன்மையானது. சோழ நாட்டின் எருக்கத்தம்புலியூரில் பிறந்து, யாழின் நரம்புகளில் சிவபக்தியை இசையாக்கிய திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார் ...

திருவோணம் திருநாள்

ஓணம் இன்று கேரளத்தின் மிகப்பெரிய பண்பாட்டு விழாவாகக் கொண்டாடப்படுகிறது. அத்தப்பூக்கோலம், ஓணசத்யா, புத்தாடை, வள்ளம் களி, புலிக்கலி, மகாபலி எனப் பல அடையாளங்களைக் கொண்ட இந்த விழாவின் வரலாறு, கேரளத்தின் இன்றைய எல்லைகளுக்குள் மட்டும் அடங்கிவிடுவதில்லை. அதன் தொன்மையான இலக்கியச் சுவடுகளை சங்கத் தமிழிலக்கியத்திலேயே காண முடிகிறது. சங்ககாலப் பாண்டிய நாட்டின் தலைநகரான மதுரையின் வாழ்க்கையை மிக அழகாகப் பதிவு செய்தவர் மாங்குடி மருதனார். அவர் இயற்றிய மதுரைக்காஞ்சி , அக்கால மதுரையின் அரசியல், வணிகம், கலை, சமயம், மக்கள் வாழ்க்கை, விழாக்கள் ஆகிய அனைத்தையும் நம் கண்முன் கொண்டு வருகிறது. அதில் ஓணத்தைப் பற்றிய மிக முக்கியமான வரிகள் இடம்பெறுகின்றன: “கணங்கொள் அவுணர்க் கடந்த பொலந்தார் மாயோன் மேய ஓண நன்னாள்” அதாவது, அசுரர்களை வென்ற மாயோனாகிய திருமாலுக்குரிய ஓணத்தின் நன்னாள் என்று மாங்குடி மருதனார் குறிப்பிடுகிறார். இதன் மூலம் சங்ககால மதுரையிலேயே ஓணம் ஒரு அறியப்பட்ட திருநாளாக இருந்தது என்பது தெளிவாகிறது. இன்று கேரளத்தின் தனித்துவமான அடையாளமாகக் கருதப்படும் ஓணம், பண்டைய தமிழ்ச் சமூகத்திலும் அறியப்பட்டு ...

ஆலிலை

பத்திரன்கோட்டை, தென்காசி அருகே உள்ள சிறிய ஊர்‌. ஊரே தேர்தல்‌ பரப்பரப்பிலும்‌, கொரானா இரண்டாவது அலையின்‌ பரப்பப்பிலும்‌ இருக்க, தன்‌ உலகத்துக்கும்‌ அதற்கும்‌ சம்பந்த இல்லை என்பது போல்‌, அந்த ஊரின்‌ வடபுறத்தில்‌ அமைந்திருந்த ஆபத்து காத்த அம்மன்‌ கோவிலின்‌ சப்த மாத சன்னிதியை வெறித்து பார்த்தப்படி அமர்ந்து இருந்தாள்‌ ஸ்ரீஜா. ஸ்ரீஜா ஒரு தமிழ்‌ தொலைக்காட்சியின்‌ ஒரு நிகழ்ச்சியின்‌ க்ரியேட்வ்‌ ஹெட்‌. அவளுக்கு சிறுவயதிலேயே அமானுஷ்யம்‌, வரலாற்றில்‌ ஆர்வம்‌ அதிகம்‌. அந்த ஆர்வத்துடன்‌ அவள்‌ கற்பனை திறனும்‌ இனைய 25 வயதிலேயே பிரபல தொலைக்காட்சியின்‌ ப்ரைம்‌ ஸ்லாட்‌ நிகழ்ச்சியின்‌ க்ரியேட்வ்‌ ஹெட்‌ ஆக முடிந்தது.அவள்‌ தென்காசி வந்தது, வாரம்‌ ஒரு அமானுஷ்யம்‌ என்ற நிகழ்ச்சிக்காக. தென்காசி மலையடிவாரத்தில்‌ குடில்‌ அமைத்து, கூடு விட்டு கூடு பாயும்‌ விந்தையான பரகாய ப்ரவேசத்தில்‌ இருந்து அஷ்டமா சித்து வரை தன்னால்‌ செய்ய முடியும்‌, கொரானாவிற்கு மருந்து இமயமலையில்‌ உள்ளது, அதை தன்னால்‌ கண்டறிய முடியும்‌ என உதார்விட்ட ஒரு சாமியாரை பேட்டி எடுக்க. பேட்டியெல்லாம்‌ எடுத்து முடித்து, அவள்‌ ஊருக்கு கிளம்பும்‌ நேரத்த...