கிறுக்கல்
விவேக்கின் உடலுக்கு அவர் மகள் கொள்ளி வைத்துவிட்டு அழுத காட்சியை பார்த்த போது, நானும் 10 வருடங்கள் முன் அதே நிலையில் நின்றது நினைவுக்கு வந்தது. காயத்தை கீறி கீறி அதற்க்குள்ளே சுகம் கண்டு கிடாக்காதீர்கள், கடந்து வாருங்கள் என என் குரு பாலகுமாரன் சொல்வார். இது காயத்தை கீறி பார்ப்பதல்ல. என் வாழ்க்கையை ஓரு பார்வையாளராக திரும்பி பார்க்கிறேன். சிறிய வயதில் இருந்தே புராண இதிகாசங்கள் அதிகம் படிப்பேன்.அதில் அரக்கர்கள் தவம் செய்யும் போது இறவா வரம் கேட்பார்கள். முனிவார்கள் மீண்டும் பிறவா நிலை கேட்பார்கள். எனக்கு சிறுவயதில் தோன்றும், இந்த வாழ்க்கை எவ்வளவு அழகானது. இதை அனுபவிக்க தெரியாமல் இந்த முனிவர்கள் மீண்டும் பிறவா நிலை கேட்கின்றார்களே என்று தோன்றும். காரணம் என் வாழ்வு அவ்வளவு இனிமையானதாக கவலைகள் இல்லாத பட்டாம்பூச்சியின் வாழ்வாக இருந்தது. கேட்டது அனைத்தும் கிடைத்தது. கிடைத்தது, என் தந்தையின் உழைப்பினால் என்பது மனதில் பதியவில்லை. என்னை பொருத்தவரை வாழ்வு என்பது இன்ப ஓடம். ஆனால் வாழ்வின் கொடூரம் என் முகத்தில் அறைந்தது என் அப்பாவின் மரணத்தில் தான்.ஓரு பிணத்தை கண்டு துறவு பூண்டான் சித்தார்த...