பொன்னியின் செல்வன்

மூவேந்தர்களில் மற்ற இரு வேந்தர்களை விட, தற்காலத்தில்  சோழர்களின்‌ வரலாறு,அதிகம் கொண்டாடுப்படுவதற்கு முக்கிய காரணம் பொன்னியின் செல்வன் தான். இதை யாரும் மறுக்க முடியாது. ஆனாலும், பாண்டியர்களையும் நாவல் தலைவராகளாக கொண்டு, தீபம் நா. பார்த்தசாரதியும், சாண்டியல்யனும் பல நாவல்கள் எழுதியுள்ளனர்.ஆனாலும் பொன்னியின் செல்வன் பெற்ற கவன ஈர்ப்பையும் , கொண்டாட்டத்தையும்  அந்த நாவல்கள் பெறவில்லை. 
 பொன்னியின் செல்வனின் மாபெரும் வெற்றிக்கு,கல்கியின் எழுத்து வன்மை காரணம் என்றாலும், அவர் எடுத்துக் கொண்ட கதைக்களமும் ஒரு முக்கிய காரணம். ஆயிரம் ஆண்டுகளையும் தாண்டிய நீண்ட நெடிய வரலாறு கொண்ட, சோழ பேரரசின் வரலாற்றில், ஒளி மிகுந்த, எழுச்சியான காலக்கட்டம் கிபி 950- 980 கிபி. இதை கல்கியே நாவலில் , சோழ சம்ராஜ்ஜியம் இப்போது ஆடி புனல் போல் பல்கி பெருகும் காலக்கட்டம் என்று சொல்லி இருப்பார். எழுச்சி என்று ஒரு இருந்தால், போட்டியும் பொறாமையும் சேர்ந்தே வளரும் .சோழ சம்ராஜ்ஜியம் வளர்ந்து கொண்டு இருந்தாலும், கிபி 949- கிபி 962 13 வருடங்களில், கண்டாராத்தித்தர், அரிஞ்சயர், சுந்தரசோழர் என மூன்று மன்னர்களை கண்டதும், சுந்தர சோழர் ஆட்சியின் இறுதியில் அவரது மூத்த மகனும் பட்டத்து இளவரசனுமான ஆதித்தன் மர்மமாக இறந்த குழப்பம் சூழ்ந்த காலக்கட்டம். அந்த குழப்பமும் சூழ்ச்சியும் சூழ்ந்த, அதே சமயம் அதையும் மீறிய எழுச்சியான காலக்கட்டத்தை பற்றிய கல்கியின் வர்ணனையும், சோழர்கள் நடத்திய போர் காட்சிகளும், இலங்கை பற்றிய வர்ணனைகளும் வாசகர்களை  ஒரு fantasy உலகத்தில் தள்ளுயது. அடுத்து பெரும்பாலான மாஸ் படங்களின் ஃபார்முலா தான். சிற்றரசாக இருந்த ஒரு நாடு பேரராசாக மாறுவதை, கல்கி விஜயலாய சோழர் காலத்தில் இருந்து விவரிக்கும் போது, அடிப்பட்ட ஹீரோ திரும்ப, வில்லனை அடிக்கும் போது, தன்னை அந்த இடத்தில் பொருத்தி மகிழும் சாமன்யனின் உள கிளர்ச்சிக்கும் தீனிப் போட்டது பொன்னியின் செல்வன். மற்றோரு முக்கிய காரணம் நந்தினியின் பாத்திரப்படைப்பு, படம் எடுத்து ஆடும் பாம்பின் கவர்ச்சி போல்,அழகே உருவான ஆபத்து, காசிப்பட்டின் மென்மையும், மின்னலின் ஜ்வலிப்பும் தன் குரலில் கொண்ட நந்தினி. பொன்னியின் செல்வன் நாவலை தூக்கி நிறுத்தும் முக்கிய தூண், கற்பனையானாலும் நந்தினி கதாபத்திரம் தான்.
இதெல்லாம் தாண்டியும் சோழர்களின் வரலாறே வசீகரிக்கும்  தன்மை உடையது தான் . அவர்களால், போரில் மூர்க்கம் காட்டவும் முடியும், கற்றளி எழுப்பி இறை முன் கைக்கூப்பி நிற்கவும் முடியும். அவர்கள் நடத்திய கடற்போரும் கீழ்திசை நாடுகள் பெரும்பாலான நாடுகளை கைப்பற்றிய கம்பீரமும், ஆழ்கடலில் வீசும் சண்ட மாருதத்தின் கம்பீரத்தை நிகர்த்தது. அந்த கம்பீரம் முழுவதும் வெளிப்பட்டது தான் பொன்னியின் செல்வனின் வெற்றி.

பொன்னியின் செல்வன் மீண்டும் நிகழவே முடியாத one time wonder. ஒரே சூரியன்! ஒரே நிலா! ஒரே பொன்னியின் செல்வன்❤️❤️

Comments

Popular posts from this blog

அப்பம் வடை தயிர்சாதம்

Dude என் பார்வை..

ஆதித்த கரிகாலன் கொலை வழக்கு