Posts

Showing posts from July, 2025

காதல் தீபம்

கடாரமும் முந்நீர் பழந்தீவும் வெற்றி கொண்டு, கீழை கடல் பிராந்தியம் முழுவதும் வெற்றி கொண்ட சோழர் படை பெரும் ஆராவரத்துடன் நாகை துறைமுகத்தில் தரை இறங்கி கொண்டு இருந்தது. லட்சக்கணக்கான வீரர்கள், சொந்தங்களை விரைவில் காண போகின்றோம் என மகிழ்ச்சி பெருக்குடன் தரை இறங்கி கொண்டு இருந்தார்கள். வீரர்கள் மற்றும் கப்பல்களின் எண்ணிக்கை கொண்டு பார்க்கும் போது தரை இறங்கவே ஒரு பொழுது கடந்து விடும் போல் இருந்தது. இதை எல்லாம் பெரிய மரகலத்தின் விளிப்பில் இருந்து பார்த்து கொண்டு இருந்தார் மாமன்னர் ராஜேந்திர சோழர். 50 வயது கடந்தாலும் உடம்பின் தசைகள் இறுகி, வாலிப முறுக்கொடு தான் இருந்தார். கடற்கரை காற்று அவரது வெள்ளி முடிகளை அசைத்து சென்றது. மறைந்து கொண்டு இருக்கும் கதிரவனின் பொன்னொளியில் மன்னரின் தோற்றம் அழகாக இருந்தது. மன்னரின் எகாந்தத்தை கலைக்கும் வகையில் மேல் தளத்திற்கு யாரோ படி ஏறி வந்து கொண்டு இருந்தார்கள். ஓ! ராஜேந்திர சோழரின் தளபதி அருள்மொழி.50 வயது மதிக்கலாம். “ வா! அருள்மொழி! தரையிறங்க ஏற்பாடு ஆகிவிட்டதா?” “ ஆகி விட்டது அரசே! தங்களை பூரண கும்ப மரியாதையோடு அழைத்து செல்ல, அனைத்தும் தயாராகி விட்டது. புறப...