யானை ஆதி மனிதனின் முதல் காதல்
யானை எனக்கு மிகவும் பிடித்த விலங்கு. நான் சிறுவயதில் இருந்தே குண்டான உடல்வாகு கொண்ட பெண். பப்ளிமாஸ், பிந்துகோஷ் குட்டியானை போன்ற கேலிகளை கடந்து வந்துருக்கின்றேன். அதனாலோ என்னவோ எனக்கு சிறுவயதிலேயே யானை பிடிக்க தொடங்கிவிட்டது. வளர்ந்த பின் யானையின் குணாதிசயம் என்னை மிகவும் வசீகரித்தது. எவ்வளவு கம்பீரமான உயரமும், எடையும். ஆனால் குணத்தில் சிறு குழந்தை. அடக்கமான புத்திசாலியான விலங்கு. ஆனால் சீண்டினால், மதம் பிடித்த யானையின் சீற்றத்தை அடக்க முடியாது. யானையின் நீண்ட தும்பிக்கை சொல்லும் சுவாச பாடம் உணர்ந்தால், மனிதரும் 120 வருடங்கள் வாழலாம்.ஆனால் வாழ்த்தல் என்பது இருத்தலை மட்டும் குறிக்கும் நிகழ்வு அல்ல. பல்லுயிர் இயைந்து வாழும் பூமியில் மற்ற ஜீவராசிகளுக்கும் உள்ள உரிமையை மதித்து வாழ்ந்தால் மட்டுமே, மனித வாழ்வு நிலைக்கும்; சிறக்கும். பட்டம்பூச்சிகளின் அழிவு கூட உணவு சங்கிலியின் ஒரு கண்ணியை தகர்த்து மானுட அழிவிற்கு வழிவகுக்கும்.அதனால் தான் ஐன்ஸ்டீன் தேனீயின் அழிவு மானுட அழிவு என்று சொன்னார். மகரந்த சேர்க்கை செய்ய தேனீக்கள் இல்லாது போனால், காடு பெருகாது. காடுகள் இல்லையெனில் ம...