யானை ஆதி மனிதனின் முதல் காதல்

யானை எனக்கு‌ மிகவும் பிடித்த விலங்கு. நான் சிறுவயதில் இருந்தே குண்டான உடல்வாகு கொண்ட பெண். பப்ளிமாஸ், பிந்துகோஷ் குட்டியானை‌ போன்ற கேலிகளை கடந்து வந்துருக்கின்றேன். அதனாலோ என்னவோ எனக்கு சிறுவயதிலேயே யானை பிடிக்க தொடங்கிவிட்டது. வளர்ந்த பின் யானையின் குணாதிசயம் என்னை மிகவும் வசீகரித்தது. எவ்வளவு கம்பீரமான உயரமும், எடையும். ஆனால் குணத்தில் சிறு குழந்தை. அடக்கமான புத்திசாலியான விலங்கு. ஆனால் சீண்டினால், மதம் பிடித்த யானையின் சீற்றத்தை அடக்க முடியாது. யானையின் நீண்ட தும்பிக்கை சொல்லும் சுவாச பாடம் உணர்ந்தால், மனிதரும் 120 வருடங்கள் வாழலாம்.ஆனால் வாழ்த்தல் என்பது இருத்தலை மட்டும் குறிக்கும் நிகழ்வு அல்ல. பல்லுயிர் இயைந்து வாழும் பூமியில் மற்ற ஜீவராசிகளுக்கும்  உள்ள உரிமையை மதித்து வாழ்ந்தால் மட்டுமே, மனித வாழ்வு நிலைக்கும்; சிறக்கும். பட்டம்பூச்சிகளின்  அழிவு கூட உணவு சங்கிலியின் ஒரு கண்ணியை தகர்த்து மானுட அழிவிற்கு வழிவகுக்கும்.அதனால் தான்  ஐன்ஸ்டீன் தேனீயின் அழிவு மானுட அழிவு என்று சொன்னார். மகரந்த சேர்க்கை செய்ய தேனீக்கள் இல்லாது போனால், காடு பெருகாது. காடுகள் இல்லையெனில் மழை பொழியாது. யானைகள் கிலோமீட்டர் கனக்கில் நடப்பதற்கும் உணவு சங்கிலிக்கும் கூட  தொடர்பு உண்டு.‌ஒரு யானை நடக்கும் வழியில் தன் சாணம் மூலமாக விதைகளை விதைத்து கொண்டே நடக்கும். காடுகள் செழிக்க பல்லுயிரிகளும் காரணம்.  யானைகளின் வழித்தடங்களில் வீடு கட்டி மறித்து விட்டு பெட்ரோல் ஊற்றி கொளுத்த எப்படி மனம் வருக்கின்றதோ. கர்ப்பினி யானைக்கு வெடி வைத்த அன்னாசி பழம் கொடுத்தார்கள். இப்போது இந்த நிகழ்வு. யானைகளும் பாவம். பல்லுயிர் போற்றும் மனப்பான்மை என்று மனிதருக்கு வருக்கின்றதோ அன்றே இதற்கு எல்லாம் தீர்வு.

Comments

Popular posts from this blog

ஆதித்த கரிகாலன் கொலை வழக்கு ( பகுதி4)

ஆதித்த கரிகாலன் கொலை வழக்கு

ஆதித்த கரிகாலன் கொலை வழக்கு ( பகுதி5)