பொங்கல்

பொங்கல் பண்டிக்கை பற்றி சங்க தமிழ் பாடல்களில் குறிப்பு உண்டா என்றால் இல்லை என்பதே மேலோட்டமான பதில். ஆனால் தை நீராடல் பற்றி பல பாடல்கள் உண்டு. பானையில் பொங்கி வரும் பொங்கல் பற்றிய உவமை  சீவக சிந்தாமணியில்  உண்டு. சிலப்பதிக்காரம் சதுக்க பூதத்திற்கு புழுக்கல் ( பொங்கல் ) படையல் போட்டது பற்றி சுட்டும். பிற்காலத்தில் ராஜேந்திர சோழன் காலத்தில் மகர சங்கராந்தியாக கொண்டாடப்பட்டுள்ளது. ஆனால் இது தமிழரின் உணர்வில் கலந்த பண்டிகை. மற்றோரு வகையில் யோசித்தால், இது பழங்குடிகளின் பண்டிகை. பரத கண்டத்தின் பழங்குடிகள் எல்லாம் வெவ்வெறு பெயரில் அறுவடை திருநாளை கொண்டாடுகின்றனர். பொங்கல் திருநாள் மானுடவியல் வளர்ச்சியை பறைசாற்றும் பண்டிகை.
பொங்கலோ! பொங்கல்!.

Comments

Popular posts from this blog

அப்பம் வடை தயிர்சாதம்

ஆதித்த கரிகாலன் கொலை வழக்கு ( பகுதி4)

ஆதித்த கரிகாலன் கொலை வழக்கு