முதலாம் சடையவர்ம சுந்தர பாண்டியன்
இன்று சித்திரை மூலம் பிற்கால பாண்டியரில் புகழ்ப்பெற்ற முதலாம் சடையவர்ம சுந்தரபாண்டியனின் ஜென்ம நட்சத்திரம். பொன்னியின் செல்வன் நாவலின் பிரமாண்டமான வெற்றிக்கு பிறகு, ராஜராஜ சோழரும், ராஜேந்திர சோழரும் கொண்டாடப்பட்ட அளவுக்கு வேறு தமிழ் மன்னர்கள் கொண்டாடப்படவில்லை.. ஆனால் இராஜேந்திர சோழருக்கு இனையாக தமிழக நிலப்பகுதிகள் தாண்டி, இன்றைய கேரளா, ஆந்திரா நெல்லூர் பகுதி, கர்நாடகாவின் கோலார் பகுதி, இலங்கை மற்றும் தாய்லந்து நாடு வரை கைப்பற்றி மிகப்பெரிய பிற்கால சாம்ராஜ்யத்தை கட்டி அமைந்தவர். ஆனால் இவரின் பிற்கால வாரிசுகள், பங்காளி சண்டையிட்டு, மாலிக் கபூரின் படையெடுப்பிற்கு காரணம் ஆனார்கள். ஆனால் இவர் அமைந்த ராஜப்பட்டையை சரியாக பயன்படுத்தி அமைந்தது தான் விஜயநகர சம்ராஜ்யம். பழுத்த சிவ பக்தரான இவர், சிவ ஆலயங்களுக்கு மட்டும் அல்ல வைணவ ஆலயங்கள் பலவற்றுக்கும் திருப்பணி செய்துள்ளார். திருவானைக்காவல் கோவில் மூலஸ்தான நுழைவு வாயிலில் உள்ள பாண்டியர் சின்னமாம், இரட்டை கயல் இன்னும் சுந்தரபாண்டிய மன்னரின் புகழைப் பாடிக்கொண்டே இருக்கிறது. ஸ்ரீரங்கம் கோவிலுக்கு இவர் செய்த திருப்பணிகள் பல. சிதம்பரம் கோவ...