Dude என் பார்வை..
Dude .. படம் பார்த்தேன். பலருக்கும் எதிர்மறையான விமர்சனங்கள் இருக்கலாம். ஆனால் எனக்கு படம் பிடித்திருந்தது. படத்தின் முக்கிய கருத்தாக்கம் ஆக நான் கருதுவது, உங்கள் கவுரவத்தை கட்டமைக்கவும், உங்கள் உரிமையை நிலைநாட்டவும், பெண் உடமையல்ல. தனக்கான வாழ்வை தேர்தேடுக்க உரிமை உள்ள மனுஷி. அப்போ தாலி சென்டிமென்ட்? கலாச்சார சீரழிவு என்ற விமர்சனங்களுக்கு என் பதில்.. விருப்பமில்லாமல் கட்டப்படும் கயிறுக்கு எந்த மதிப்பும் இல்லை. களவும் கற்பும் தமிழர் நாகரிகம். ஒருவரை ஒருவர் விரும்பி, ஊரறிய இன்னாரின் மனைவி என்று அறிவித்து கட்டப்படும் கயிற்றை கட்டியவனை அந்த பெண் ஏற்றால் தான் அந்த கயிற்றுக்கு மதிப்பு. இதை தான் கண்ணகி அனைத்தும் இழந்து வந்த கோவலனிடம் "போற்றா ஒழுக்கம் புரிந்தீர் யாவதும் மாற்றா உள்ள வாழ்க்கையேன் ஆதலின் ஏற்று எழுந்தனன் யான்” என கூறினாள்-" யாராலும் மாற்ற முடியாத அன்பை உம் மீது வைத்திருந்தவள் என்ற காரணத்தால் நான் நீர் கூப்பிட்ட உடனே எல்லோரையும் விட்டு உம்மோடு புறப்பட்டு வந்துவிட்டேன் என்று கூறுகின்றாள். அதாவது நீ கூப்பிட்டதால் வரவில்லை, நான் விரும்பியதால்,...