Dude என் பார்வை..
Dude .. படம் பார்த்தேன். பலருக்கும் எதிர்மறையான விமர்சனங்கள் இருக்கலாம். ஆனால் எனக்கு படம் பிடித்திருந்தது. படத்தின் முக்கிய கருத்தாக்கம் ஆக நான் கருதுவது, உங்கள் கவுரவத்தை கட்டமைக்கவும், உங்கள் உரிமையை நிலைநாட்டவும், பெண் உடமையல்ல. தனக்கான வாழ்வை தேர்தேடுக்க உரிமை உள்ள மனுஷி.
அப்போ தாலி சென்டிமென்ட்? கலாச்சார சீரழிவு என்ற விமர்சனங்களுக்கு என் பதில்.. விருப்பமில்லாமல் கட்டப்படும் கயிறுக்கு எந்த மதிப்பும் இல்லை. களவும் கற்பும் தமிழர் நாகரிகம். ஒருவரை ஒருவர் விரும்பி, ஊரறிய இன்னாரின் மனைவி என்று அறிவித்து கட்டப்படும் கயிற்றை கட்டியவனை அந்த பெண் ஏற்றால் தான் அந்த கயிற்றுக்கு மதிப்பு. இதை தான் கண்ணகி அனைத்தும் இழந்து வந்த கோவலனிடம் "போற்றா ஒழுக்கம் புரிந்தீர் யாவதும் மாற்றா உள்ள வாழ்க்கையேன் ஆதலின் ஏற்று எழுந்தனன் யான்” என கூறினாள்-" யாராலும் மாற்ற முடியாத அன்பை உம் மீது வைத்திருந்தவள் என்ற காரணத்தால் நான் நீர் கூப்பிட்ட உடனே எல்லோரையும் விட்டு உம்மோடு புறப்பட்டு வந்துவிட்டேன் என்று கூறுகின்றாள்.
அதாவது நீ கூப்பிட்டதால் வரவில்லை, நான் விரும்பியதால், உன் மீது உள்ள அன்பை மாற்ற முடியாததால் வந்தேன் என்கிறாள். கணவன் என்று கண்மூடித்தனமாக வந்துவிட விலை. உன் மீது உள்ள விருப்பத்தை மாற்ற முடியவில்லை அதனால் வந்தேன் என்கிறாள். இது 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட சமுதாயத்தில் சிலப்பதிகாரம் பேசும் நுட்பமான பெண் சுதந்திரம். இந்த பெண் சுதந்திரத்தை தான் Dude திரைப்படம் genz தலைமுறையினர் க்கான திரை மொழியில் சொல்கிறது. என்னை பொறுத்த வரை சமூகத்திற்கு பலனளிக்காத படைப்புகள் வீண். ஆணவ படுகொலைக்கான எதிர்ப்பு,பெண் உடமையல்ல என பல சமூக கருத்துக்களை casual ஆக பேசி இருக்கும் dude திரைப்படம் நல்ல படைப்பு.
Comments
Post a Comment