உலக வன நாள்
இன்று உலக வன நாள். காடுகள் இன்றி அமையாதது உலகு. காடுகளின் ராஜா சிங்கம் என்றாலும், என்னை பொருத்தவரை காடுகளின் பிதாமகன் யானை தான். யானை, தனது வலசை பாதையில், தன் சாணத்தின் மூலம் ஒரு நாளைக்கு 30 கிலோ மீட்டர் அளவிற்கு, வனப்பரப்பின் எல்லையை விஸ்தரிக்க, விதைகள் தூவி செல்லும் . வேழக்காடுகள் என்றே ஊட்டி மலை பகுதியை பழம் கல்வெட்டுகள் குறித்து இருக்கின்றன. ஓடுகின்ற நதிகளின் மூலம் எல்லாமே காடுகள். காடுகள் அழிந்தால், நீரும் உணவும் இன்றி பஞ்சத்தில் மாள வேண்டியது தான். அடர்த்தியான வேழ காடுகள் மட்டும் அல்ல, கடற்கரை ஓரம் வளரும் குட்டை மரங்கள் உள்ள அலையாத்தி காடுகள், ஊசி முனை காடுகள் என காடுகளிலும் எத்தனை வகை. தனிப்பட்ட முறையில் எனக்கு காடுகளின் அமைதி, தாய்மடியை போன்றது. மதுரையில் இருக்கும் போது பழமுதிர்ச்சோலை அடிக்கடி செல்வது வழக்கம். சூரிய ஒளிக்கூட எளிதாக ஊடுருவமுடியாத பழமுதிர்ச்சோலை மலையும், அங்கே ஓடி விளையாடும் வானரங்களும், தனி சந்நிதி கொண்டுள்ள வேலும் என்னை சங்க காலத்திற்கே அழைத்து போய்விடும். சங்க கால வேல் கோட்டத்திற்கு இன்றும் சாட்சியாய் இருப்பது பழமுதிர்சோலையும், சாளுவகுப்பம் முருகன் கோவிலு...