Posts

Showing posts from 2020

ரங்காநதி

மூச்சு மூட்ட வைக்கும் வாழ்க்கையின் ஓட்டத்தில் நான் சரண் அடைவது ரங்காநதியிடம். கரையில் வந்து நிற்கும் என் முகத்தை, தன் நீர் பூசிய குளிர் காற்றின் கரத்தால் துடைத்துக் கொண்டே, இதற்கே அலறினால் என்ன செய்வது? இருளும் ஓளியும் மோதிக் கொள்ளும் பிரபஞ்சத்தின் ஆட்டத்தின் முன் இந்த வாழ்க்கையின் ஆட்டம் எல்லாம் சிறுப்பிள்ளை விளையாட்டு பேதை பெண்ணே என்று தன் நீர் சுழல்களை சுழற்றிக் கொண்டே ஓடிக்கொண்டு இருக்கின்றது ரங்கா நதி. அந்த சுழற்சிக்குள் எனது எண்ணங்கள் கரைந்து போக, மெய்மறந்து ரங்கா நதிக்கரையில் நிற்கின்றேன் தாயின் சேலை நுனி பிடித்து நிற்கும் சிறு கிள்ளை போல.❤️❤️ #ரங்காநதி

ஐப்பசி சதய விழா

 இன்று‌ ஐப்பசி சதய விழா.. எனக்கு சிறுவயத்தில் இருந்தே சரித்திரம் மிகவும் பிடிக்கும். கடந்த தலைமுறையின் அனுபவம் வரும் தலைமுறைக்கு பாடம் என நம்புகின்றேன்.  சரித்திர பக்கங்களில் என்னை மிகவும் கவர்ந்த மன்னர் ராஜராஜ சோழன் . நிர்வாகதிறனும் ஆளுமையும், பெருந்தன்மையும் இறை உணர்வும் இறை தேடலும் கொண்ட மன்னன் ராஜராஜர். ஆட்சி பீடம் ஏற சொந்த சகோதரர்களை பலி கொடுத்த  மன்னர்கள் சரித்திரத்தில் உண்டு. ஆனால் நாடு நகரம் மக்கள் அனைவரும் முடி சூட்டி கொள்ள வற்புறுத்தி இளமையில் ஆட்சி பீடத்தை கையில் கொடுத்தும், தன் ஒன்று விட்ட சித்தப்பாவிற்கு ஆட்சி மீது ஆசை என்பதால் விட்டு கொடுத்து அவர் காலத்திற்கு பின் 15 ஆண்டுகள் கழித்து தன் மத்திய வயதில் தான் சோழ அரசாட்சியை ஏற்றுக் கொண்டார் என திருவாலங்காடு செப்பெடுகள் கூறுகின்றன. அடுத்து பழம்பெருமை பேசாமல் செயல்திறனை காட்டியது. முதலாம் ராஜராஜர் வரை சோழ மன்னர்கள் கல்வெட்டு சூரிய குல தோன்றல் என் அரம்பித்து மனுநீதி சோழன் சிபி சக்கரவர்த்தி, கரிகால் சோழன் என முற்கால சோழரின் பெருமை பேசி தான் ஆரம்பிக்கும் . அதில் முக்கால்வாசி புராண கதை கலந்து இருக்கும். ராஜ ராஜர் தான் பழம் பெருமை

ஆடி திருநாள்

இன்று ஆடி 18 காவிரிக்கரை களை கட்டும். தென் தமிழக மக்கள் ஆடி 18 ஐ அவ்வளவாக கண்டு கொள்ள மாட்டார்கள். ஆனால் வடக்கே ஆடி 18 திருவிழா தான். அதுவும் காவிரி தன் கடல் காதலனை நெருங்கி விட்டோம் ,என தன் நீர் கரங்களை விரித்து வரும் திருச்சியில் ஆடி 18 மிக முக்கியமான பண்டிகை. காவிரி கரையிலும் ஏரி கரையிலும் பெண்கள் குழுமி, காவிரி தாயை கர்ப்பிணியாக உருவாக படுத்தி காதோலை கருகமணி காப்பு அரிசி பழங்கள் தாலி சரடு படைத்து வழிபடுவார்கள். காவிரி என்பது சோழர்களுக்கு வெறும் நதி மட்டும் அல்ல; அன்னை. ஆயிரம் வருடங்களாக தண்ணீர் சூல்  கொண்டு, இந்த சோழ தேசத்தை மலர்ச்சி ஆக வைத்த அன்னை. அவள் எங்கள் உயிரில் கலந்த உணர்வு.❤❤❤ இந்த நன்னாளில் அந்த மகா நதியை, குடகில் பிறந்து பூம்புகாரில் கடல் சேரும் வரை இடையில் பயணிக்கும் நிலத்தை எல்லாம் பொன் கொழிக்க செய்து, சோழ தேசத்தின் ஏரி, குளங்களில் நரம்பு போல் தன் நீர் உதிரத்தால் ஊடுருவி, இந்த பூமியில் சிற்பகலையும், இசை கலையையும் பரத கலையையும் நிலை பெற செய்து, பக்தியையும் பண்பாட்டையும் நிலைக்க செய்த அந்த புண்ணிய நதியை கரம் குவித்து, சிரம் தாழ்த்தி வணங்குகின்றேன்🙏🙏🙏

காதல் ஒளி

கடாரமும் முந்நீர் பழந்தீவும் வெற்றி கொண்டு, கீழை கடல் பிராந்தியம் முழுவதும் வெற்றி கொண்ட சோழர் படை பெரும் ஆராவரத்துடன் நாகை துறைமுகத்தில் தரை இறங்கி கொண்டு இருந்தது. லட்சக்கணக்கான வீரர்கள், சொந்தங்களை விரைவில் காண போகின்றோம் என மகிழ்ச்சி பெருக்குடன் தரை இறங்கி கொண்டு இருந்தார்கள். வீரர்கள் மற்றும் கப்பல்களின் எண்ணிக்கை கொண்டு பார்க்கும் போது தரை இறங்கவே ஒரு பொழுது கடந்து விடும் போல் இருந்தது. இதை எல்லாம் பெரிய மரகலத்தின் விளிப்பில் இருந்து பார்த்து கொண்டு இருந்தார் மாமன்னர் ராஜேந்திர சோழர். 60 வயது கடந்தாலும் உடம்பின் தசைகள் இறுகி, வாலிப முறுக்கொடு தான் இருந்தார். கடற்கரை காற்று அவரது வெள்ளி முடிகளை அசைத்து சென்றது. மறைந்து கொண்டு இருக்கும் கதிரவனின் பொன்னொளியில் மன்னரின் தோற்றம் அழகாக இருந்தது. மன்னரின் எகாந்தத்தை கலைக்கும் வகையில் மேல் தளத்திற்கு யாரோ படி ஏறி வந்து கொண்டு இருந்தார்கள். ஓ! ராஜேந்திர சோழரின் தளபதி அருள்மொழி.60 வயது மதிக்கலாம். “ வா! அருள்மொழி! தரையிறங்க ஏற்பாடு ஆகிவிட்டதா?” “ ஆகி விட்டது அரசே! தங்களை பூரண கும்ப மரியாதையோடு அழைத்து செல்ல, அனைத்தும் தயாராகி விட்டது. ப

கிளிஞ்சல் கூடு

வித விதமான  யாத்ரீகர்கள் அலையும் ராமேஸ்வரம் தீவு. கோவிலுக்கு எதிரில் கடல் அக்னி தீர்த்தமாக விரிந்து இருந்தது. அன்று தை அம்மாவசை கூட்டம் அதிகம் இருந்தது. ராமேஸ்வரம் தீவின்  ஒரு கரையில் டீசல் படகுகளும், வள்ளங்களும், கட்டுமரங்களும் நிறைந்து கிடந்த மீனவ குப்பத்தின் ஒரு குடிசையில் தான் அவன் கண்மூடி படுத்து இருந்தான். அவன் பெயர் அய்யனார். கடலாடும் மீனவன். நீண்ட கடற்கரை கொண்ட இந்திய தீபகற்பத்தின் கடற்கரை நெடுக நிறைந்த , ஆனால் சமவெளி மக்களால் அதிகம் கண்டு கொள்ளப்படாத மீனவ கூட்டத்தில் அய்யனாரும் ஒருவன்.  ஓலை குடிசையின் இடுக்குகளில் புகுந்து, மதிய கதிரவன் கண்களை கூச செய்தான். இன்னும் தூக்கம் கண்களில் மிச்சம் இருந்தது அய்யனருக்கு. ஆனாலும் உறங்க முடியவில்லை. எழுந்து வெளியே வந்தான். புழக்கடையில் அவன் தாய், காட்டாரி பத்து தேய்த்து கொண்டு இருந்தாள். முகங்கழுவி கொண்டு வந்து, சோறு எடுத்து வை ஆத்தா என குரல் கொடுத்தான். “ இன்னிக்கு கப்பா சோறு தான் டா. ரேசன் அரிசி வடிச்ச தான் உனக்கு ஆகாது. கடை அரிசி வாங்க தான் சரியா பாடு இல்லியே,பொங்க வேற வருது. உன் அய்த  வேற போன் அடிச்சு, ஊருக்கு வாங்க மதினினா , என்ன ச