ஆடி திருநாள்
இன்று ஆடி 18 காவிரிக்கரை களை கட்டும். தென் தமிழக மக்கள் ஆடி 18 ஐ அவ்வளவாக கண்டு கொள்ள மாட்டார்கள். ஆனால் வடக்கே ஆடி 18 திருவிழா தான். அதுவும் காவிரி தன் கடல் காதலனை நெருங்கி விட்டோம் ,என தன் நீர் கரங்களை விரித்து வரும் திருச்சியில் ஆடி 18 மிக முக்கியமான பண்டிகை. காவிரி கரையிலும் ஏரி கரையிலும் பெண்கள் குழுமி, காவிரி தாயை கர்ப்பிணியாக உருவாக படுத்தி காதோலை கருகமணி காப்பு அரிசி பழங்கள் தாலி சரடு படைத்து வழிபடுவார்கள்.
காவிரி என்பது சோழர்களுக்கு வெறும் நதி மட்டும் அல்ல; அன்னை. ஆயிரம் வருடங்களாக தண்ணீர் சூல் கொண்டு, இந்த சோழ தேசத்தை மலர்ச்சி ஆக வைத்த அன்னை. அவள் எங்கள் உயிரில் கலந்த உணர்வு.❤❤❤
இந்த நன்னாளில் அந்த மகா நதியை, குடகில் பிறந்து பூம்புகாரில் கடல் சேரும் வரை இடையில் பயணிக்கும் நிலத்தை எல்லாம் பொன் கொழிக்க செய்து, சோழ தேசத்தின் ஏரி, குளங்களில் நரம்பு போல் தன் நீர் உதிரத்தால் ஊடுருவி, இந்த பூமியில் சிற்பகலையும், இசை கலையையும் பரத கலையையும் நிலை பெற செய்து, பக்தியையும் பண்பாட்டையும் நிலைக்க செய்த அந்த புண்ணிய நதியை கரம் குவித்து, சிரம் தாழ்த்தி வணங்குகின்றேன்🙏🙏🙏
Comments
Post a Comment