ரங்காநதி
மூச்சு மூட்ட வைக்கும் வாழ்க்கையின் ஓட்டத்தில் நான் சரண் அடைவது ரங்காநதியிடம்.
கரையில் வந்து நிற்கும் என் முகத்தை, தன் நீர் பூசிய குளிர் காற்றின் கரத்தால் துடைத்துக் கொண்டே, இதற்கே அலறினால் என்ன செய்வது? இருளும் ஓளியும் மோதிக் கொள்ளும் பிரபஞ்சத்தின் ஆட்டத்தின் முன் இந்த வாழ்க்கையின் ஆட்டம் எல்லாம் சிறுப்பிள்ளை விளையாட்டு பேதை பெண்ணே என்று தன் நீர் சுழல்களை சுழற்றிக் கொண்டே ஓடிக்கொண்டு இருக்கின்றது ரங்கா நதி. அந்த சுழற்சிக்குள் எனது எண்ணங்கள் கரைந்து போக, மெய்மறந்து ரங்கா நதிக்கரையில் நிற்கின்றேன் தாயின் சேலை நுனி பிடித்து நிற்கும் சிறு கிள்ளை போல.❤️❤️
#ரங்காநதி
Comments
Post a Comment