மங்கயற்கரசி
"மங்கையர்க் கரசி வளவர்கோன் பாவை வரிவளைக் கைம்மட மானி
பங்கயச் செல்வி பாண்டிமா தேவி பணிசெய்து நாடொறும் பரவப்
பொங்கழ லுருவன் பூதநா யகனால் வேதமும் பொருள்களும் அருளி
அங்கயற் கண்ணி தன்னொடும் அமர்ந்த ஆலவா யாவதும் இதுவே."
மங்கையர்கரசி வளவர் கோன் பாவை, பங்கய செல்வி பான்டிமாதேவி என்று ஆளுடைய பிள்ளை, திருஞான சம்பந்தர் கூவி அழைக்கின்றாரே ! அந்த மங்கையர்கரசி பற்றி, சோழ நாட்டில் பிறந்து, பாண்டிய நாட்டில் புகுந்த அந்த பாண்டிமாதேவியின் வரலாற்றை பார்ப்போமா?
உறையூரின் மணிமுடி சோழருக்கு கி. பி. 630 காலக்கட்டத்தில் மகளாக அவத்தரித்தவள் மானி. அப்போது மதுரையை ஆண்ட கூன் பாண்டியன் என்னும் நின்ற சீர் பாண்டியன் உறையூர் மீது போர் தொடுத்து, ஒரே நாளில் சோழ மன்னரை விழ்த்தி, போர் பரிசாக மானியை திருமணம் செய்துக் கொண்டான். இதனால் சோழ பாண்டிய உறவு மலர்ந்தாலும், ஒரு சிக்கல் எழுந்தது. வழி வழியாக சிவனை வழிபட்டு வந்த இளவரசி மானி. ஆனால் அவளது கணவன் நின்ற சீர் நெடுமாற பாண்டியன் சமண மதத்தை மேற்கொண்டார். மன்னன் எவ்வழியோ மக்களும் அவ்வழி. அன்னை மீனாட்சியின் வழி வந்த பாண்டியர் குலம், சைவத்தை துறந்து சமணத்தை ஏற்றதால் மீனாட்சியும் சொக்கரும் கொண்டாடபடாமல் மதுரை பொலிவிழந்து இருண்டது. இந்த நிலை தீவிர சிவ பக்த்தையான மானி என்னும் மங்கயர்கரசியின் உள்ளத்தை மிகவும் வருத்தியது. ஈஸ்வரா 64 திருவிளையாடல்கள் புரிந்து நீ விளையாண்ட மண்ணில் சைவம் மறைவதா? உன் சோதனைக்கு எல்லை இல்லையா ? அழுது அவள் வேண்டியது ஈசனுக்கு கேட்டதோ என்னவோ, மதுரை மண்ணில் மீண்டும் சைவம் மலர அவளுக்கு உதவ அமைச்சர் குலச்சிறையார் முன் வந்தார். குலச்சிறையார் தீவிர சிவபக்தர்.
மானியின் கதை தொடரும்..
Comments
Post a Comment