ஆதித்த கரிகாலன் கொலை வழக்கு (பகுதி 3)
பஞ்சவன் பிரம்மாதிராஜன் :
உடையார்குடி கல்வெட்டில் ஆதித்த கரிகாலனை கொன்றதாக வரும் நால்வரில் ஒருவனான ரவிதாசனின் பட்டம் பஞ்சவன் பிரம்மாதிராஜன். கன்னியாகுமரி மாவட்டம் பார்த்திவபுரத்தில் 923 ம் ஆண்டைச்சேர்ந்த கல்வெட்டு ஒன்றில் பஞ்சவன் பிரம்மாதிராஜனான குமரன் நாராயணன் என்பவர் இவ்வூர் இறைவனுக்கு இரண்டு நந்தாவிளக்கு தானமளிக்கிறார். இந்த கோவில் ஆய் மன்னன் கருநந்தடதக்கனால் கட்டப்பட்டது. இம்மன்னரது பார்த்திவசேகரபுர செப்பேட்டில் காந்தளூர் சாலை போல பார்த்திவசேகரபுரத்தில் நான்கு சாலைகளை நிர்மாணித்ததாய் கூறுகிறார். திருநந்திக்கரையிலுள்ள இவரது மகனான விக்ரமாதித்ய வரகுணனும், மன்னரின் பெயர் இல்லாத மற்றொரு கல்வெட்டும் சாலை களமறுத்தளிய ஆண்டு என கூறுகிறது! எழுத்தமைதி வைத்து இவை பத்தாம் நூற்றாண்டு என கணிக்கின்றனர்.
இராஜராஜன் தன் இரண்டாம் ஆட்சியாண்டில் ஆதித்த கரிகாலனை கொன்றதாக குறிப்பிடும் நால்வர் பெயரின் பட்டமும் இவர் பெயரின் பட்டமும் ஒன்று. இருவரையும் இணைக்கும் இணைப்பு புள்ளி கல்வெட்டில் இல்லை எனினும் ஏதோ தொடர்பு நூலிழையாய் ஆடுகிறது.
காந்தளூர் சாலைப் பற்றி இன்னும் தெளிவு பெற கேரள நம்பூதிரி பிராமணர்களை பற்றிய தெளிவு வரவேண்டும்.
நம்பூதிரி:
கேரளத்தின் சமூக வாழ்வில் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கம்வரை அரசியல், பண்பாடு, பொருளாதாரம் என அனைத்திலும் ஆதிக்கம் செலுத்திவந்தவர்கள் நம்பூதிரிப் பிராமணர்கள் ஆவர்.
நம்பூதிரி சாதியின் தோற்றம் குறித்த செய்திகள் ‘கேரளோற்பத்தி’, ‘கேரளமகாத்மியம்’ என்ற மலையாள புராணங்களில் இடம்பெற்றுள் ளன. பரசுராமன் என்ற முனிவன் துளுநாட்டிலும், கேரளத்திலும் அறுபத்துநான்கு பிராமணர் குடி யிருப்புகளை உருவாக்கி, அதில் நம்பூதிரிப் பட்டத் தையும் வழங்கியதாக இப்புராணங்கள் குறிப்பிடு கின்றன.
இந்த நம்பூதிரிகள் தனுர் வேதம் எனப்படும் வில் வித்தை, களரி போன்ற யுத்த பயிற்சி அளிக்க ஆரம்பித்து வைத்தது தான் காந்தளூர் சாலை. பின் காந்தளூர் சாலையை முன்மாதிரியாக கொண்டு நான்கு சாலைகள் திறக்கப்பட்டது என விழிஞம் பகுதியை ஆண்ட ஆய் மன்னனின் கல்வெட்டு கூறுகிறது. இந்த விழிஞம் துறைமுகம் மற்றும் ஆய் மன்னர்கள் பற்றி பின்பு பார்ப்போம். இப்போது நம்பூதிரி பிரமணர்களிடம் வருவோம். நம்பூதிரி என்றால் நம் கண் முன் தோன்றுவது முன் குடுமி அந்தணர்கள். தமிழ்நாட்டின் ஒரு பிரபல கோவிலும் முன் குடுமி அந்தணர்களை நீங்கள் பார்த்து இருக்க கூடும். என்ன பொறி தட்டுகிறதா? ஆம்
சிதம்பரம் தீட்சிதர்கள், கேரள நம்பூதிரிப் பிராமணர்கள், முன் குடுமிச் சோழியர்கள் ஆகியோர் குடுமி அணியும் வழக்கத்தை இத்தோடு ஒப்பிடுகையில் பொருள் இன்னும் நன்றாக விளங்கும். வேதத்தில் கூறப்படும் ‘பாணி’ (Style) அது. நான் சொல்ல வந்தது சிதம்பரம் தீட்சிதர்கள் பற்றி தான். இவர்களைப் பற்றி அக்னிஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் என்ன சொல்லியிருக்கின்றார் என பார்ப்போமா?
வழிபாட்டு முறைகளுக்காக உண்டாக்கப்பட்டதுதான் ஆகமம். அதாவது வைஷ்ணவத்தில் பாஞ்சராத்ர ஆகமம் வைகானஸ ஆகமம்னு ரெண்டு இருக்கு. சைவத்துக்கு சிவாகமம்னு பேர். இந்த ஆகமத்தை அதாவது வழிபாட்டு முறையை புறக்கணிச்சிட்டு 'வேதம் சொன்னபடிதான் வழிபாடு நடத்துவோம்'னு சொல்பவர்கள்தான் தீட்சிதர்கள்.
தீட்சிதர்கள் என்ற சொல்லுக்கு தீட்சை பெற்றவர்கள் என்று அர்த்தம். மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயிலில் பூஜை செய்யும் பட்டாச்சாரியார்களுக்கும் தீட்சிதர்கள் என்ற பட்டம் உண்டு. அவர்கள் ஆகம தீட்சை பெற்றவர்கள். ஆனால் இந்த தீட்சிதர்களோ வேத தீட்சை பெற்றவர்கள். அதாவது தன்னை வழிபடுவதற்காகவே கைலாசத்திலிருந்து சிவபெருமானால் அனுப்பி வைக்கப்பட்டவர்களின் வழித்தோன்றல்களாகத் தங்களைச் சொல்லிக் கொள்கிறார்கள் இந்த தீட்சிதர்கள். அவர்களுக்கு தாங்கள்தான் 'ஒரிஜினல் பிராமணர்கள்' என்ற எண்ணம் உண்டு.
இந்த தீட்சிதர்களது ஆகமம் அல்லாத வைதீக வழிபாடு சிதம்பரத்தில் மட்டுமல்ல ஆவுடையார்கோயில் காஞ்சிபுரம் காமாட்சி கோயில் ஆகிய இடங்களிலும் நடக்கிறது. ஆனால் அவர்களெல்லாம் சிதம்பரம் தீட்சிதர்களைப் போல இவ்வளவு தீவிரமாக இல்லை. வேதத்துக்குப் பிறகான காலங்களில் தோன்றியதுதான் ஆகமம். ஆனால் வேதத்தில் சொல்லப்பட்டுள்ள யாகங்கள் முதலானவற்றைத் தீவிரமாகக் கடைப்பிடித்துவருவதுதான் தீட்சிதர்களின் வழிமுறை.
வேதம் சொன்ன யாகங்களில் முக்கியமானது பலிபொருட்கள். அதாவது மாடுகள் ஆடுகள் குதிரைகள் ஆகியவற்றை பலி கொடுக்க வேண்டும். அதனால் சிதம்பரத்திலுள்ள ஒவ்வொரு தீட்சிதரும் இன்றுவரை பசுக்களை பலி கொடுக்கும் சோம யாகம் முதலானவற்றைச் செய்துவர வேண்டும் என்பது ஐதீகம். முப்பது நாற்பது வருடங்களுக்கு முன்பு சிதம்பரத்தில் கோயிலுக்கு வெளியே பசுக்கள் பலியிடப்படும் யாகங்கள் நடத்தப்படுவதைப் பார்த்திருக்கிறேன். இன்றும் அப்படியெல்லாம் செய்கிறார்களா என்று எனக்குத் தெரியாது.
'வேத வழிபாடு என்றால் பூஜை மொழியும் வேதம் சொன்ன வடமொழியில்தான் இருக்க வேண்டும்?' என்று சொல்லித்தான் தமிழுக்கு எதிராக மல்லுக்கு நிற்கிறார்கள். இன்னும் ஒரு சங்கதி தெரியுமோ?
சைவ ஆகமத்தில் லிங்க வழிபாடு மிகவும் முக்கியமானது. ஆனால் வேத வழிபாட்டை பின்பற்றும் சிதம்பரத்தில் லிங்கத்துக்கு முக்கியத்துவம் கிடையாது. பெரும்பாலான பக்தர்கள் கோபப்படக் கூடாது என்பதற்காகத்தான் சிதம்பரத்தில் சிவபெருமான் 'ஆகாச லிங்கமாக' இருப்பதாக... அதாவது கண்ணுக்குத் தெரியாமல் இருப்பதாகச் சொல்லிவிட்டார்கள். மக்களும் நம்பிவிட்டனர்.
லிங்கத்தைவிட நடராஜர்தான் அங்கே முக்கியம். 'நடராஜ மகாத்மியம்' என்றொரு புஸ்தகத்தை எழுதியிருக்கார் ஒரு தீட்சிதர். அதில் 'சிவபெருமான் நடனப் போட்டியில காளி தேவியைத் தோற்கடிக்க வழி தெரியாமல் தன் இடக்காலை உயரே தூக்கி சங்கடப்படுத்தினார். காளியும் வெட்கப்பட்டு ஆட்டத்திறன் அதனால் பாதிக்கப்பட்டு நடராஜர் ஜெயித்தார் என்று கதையே உண்டு.
அதாவது சூத்திரர்களைத் தோற்கடிக்க வேண்டும். அவர்களின் பாஷையான தமிழை முற்றாக மறுதலிக்க வேண்டும் என்பதுதான் தீட்சிதர்களின் கொள்கை. இவர்களைப் போய் 'தில்லைவாழ் அந்தணர்கள்'னு சுத்தத் தமிழில் அடைமொழி போட்டு யார் கூப்பிட்டதோ...'' என்று பொருள் பொதியச் சிரித்தார் தாத்தாச்சாரியார் என்று விகடன் பத்திரிக்கை பேட்டியில் குறிப்பிடப்பட்டு உள்ளது.அப்படியானால் தீட்சிதர்கள் நம்பூதிரிகளா? என்றால் கலாச்சார ரீதியாக வேறுபட்டவர்கள். ஆனால் வேத வழி வழிபாட்டை மேற்கொள்பவர்கள். தீட்சிதரின் வரலாற்றின் படியே அவர்கள் தமிழகத்தை சேர்த்தவர்கள் இல்லை. வட திசையில் இருந்து வந்தவர்கள். அனேக மாக தீட்சிதர் குடியேற்றம் முதலாம் பராந்தகன் காலத்தில் நடந்து இருக்க வேண்டும். காரணம் பாரந்தகணின் பட்டத்தரசி கோகிழானடிகள், சேர இளவரசி. அவரது வயிற்றில் பிறந்த ராஜதித்தயர் பட்டம் ஏறுவார் என்ற நம்பிக்கையில் மலையாளிகள் தமிழகத்தில் குடியேறினர். ராஜாத்தியர் சேனையில் மலையாளிகள் சேணை என்றே ஒரு படைப்பிரிவு இருந்தது. ஆனால் தக்கோலம் போரில், வாரிசு இன்றி ராஜாதித்யர் இறந்தது சேர இளவரசி வயிற்றில் பிறந்த இளவரசன் சோழ அரியணை ஏறவேண்டும் என்ற சேர தேச கனவை பொய்ப்பிக்க செய்தது. சேர தேச ஆதரவு பாண்டியர் பக்கம் சாய்ந்தது அப்போது தான். ஏன் என்றால் வீரபாண்டியனின் முன்னோர் ராஜசிம்ம பாண்டியன் தாய் வழியில் சேர மரபை சேர்ந்தவன். எனவே தான் வீரபாண்டியன் கொடூரமாக கொலை செய்யப்பட்டது சேர தேசத்தில் அதிர்வுகளை ஏற்படுத்தி இருக்கலாம்.
( தொடரும்)
Comments
Post a Comment