ஆதித்த கரிகாலன் கொலை குற்றவாளி குந்தவையா?குந்தவை சோழரது புகழ் பெற்ற மன்னருள் ஒருவனான முதலாம் இராஜராஜனின் தமைக்கையும், ஆதித்த கரிகாலனின் தங்கையும், சுந்தர சோழரின் மகளுமாவாள். திருச்சி மாவட்டம் பாச்சல் என்ற ஊரில் உள்ள கல்வெட்டும், வேலூர் மாவட்டம் அ வனிஷ்வரம் அருகில் உள்ள கல்வெட்டு குந்தவை பிறந்த அவிட்டம் நட்சத்திரத்தில் சிறப்பு பூஜைகள் செய்ய ராஜ ராஜ சோழன் உத்தரவிட்டார் என்பதை தெரிவிக்கிறது. சோழர்களின் மாதண்ட நாயக்கர்களுள் ஒருவரும் வாணர் குலத்து குறுநில மன்னனுமான வல்லவரையன் வந்தியத்தேவனை மணமுடித்தவள். இராஜராஜனின் ஆட்சிக் காலத்தில் மதிப்புடன் இருந்ததாகவும் பல தானங்கள் தருமங்கள் செய்திருக்கிறாள் என்றும் முதலாம் இராஜராஜனின் கல்வெட்டுக்கள் மூலம் தெரியவருகிறது. இராஜராஜனின் தந்தையின் பெயரால் அமைக்கப்பட்ட "சுந்தர சோழ விண்ணகர்" என்னும் விஷ்ணு கோயிலில் ஒரு மருத்துவமனை இருந்து வந்துள்ளது, அந்த மருத்துவமனைக்கு குந்தவை பிராட்டி பல தானங்கள் வழங்கியிருக்கிறார் என்று கல்வெட்டுக்கள் மூலம் அறியமுடிகிறது. இராஜர...