சிந்தையில் உதித்தவை -1
இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப முடியாமலே போகலாம் என உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. புதிய இயல்பு வாழ்க்கைக்கு பழகி கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தி உள்ளது. Online வகுப்புகளில் எபிசிடி கற்று, pothys online window shopping ல் புடவை வாங்கி, டெலி கான்சல்டிங்ல் மருத்துவம் பார்த்து, virtual court ல் வழக்கு நடத்தி,zoom meeting ல் திருமணம் நடத்தி என காணொளி தொடுதிரையில் வாழ போகிறது வரும் தலைமுறை. முக கவசம் முகத்தின் ஒரு அங்கம் ஆகலாம். யோசித்து பார்த்தால் 90's kid ஆக நான் கொடுத்து வைத்தவள் என்றே தோன்றுகிறது. ஜன்னல் ஓர வெயிலின் மஞ்சள் வெளிச்சத்தில், கீதம் இசைக்கும் தேன் சீட்டுகளை ரசித்து கொண்டே எழுந்து, பேருந்து நிறுத்தத்தில் நிழல் தரும் மஞ்சனத்தி மர பூக்களை ரசித்து, மிட்டாய் கடையில் மிட்டாய் வாங்கி பள்ளிக்கு செல்லும் ஆராவரம் இல்லா அமைதியான சூழலில் வளர முடிந்தது. அதே சமயம் பள்ளியில் கணினியையும் கற்று, கணினி வளர்ச்சியையும் கண்ணுற்று , நவீன வளர்ச்சியையும் கண்ணுற்று இன்று தொடுதிரை வாழ்க்கையையும் வாழும் 90's kids குழந்தைகள் அதிர்ஷ்டசாலிகள் தான்.
Comments
Post a Comment