Posts

விலங்கு வெப் சீரிஸ்

விலங்கு வெப் சீரிஸ் இப்போது தான் பார்த்தேன். திருச்சியில் நடைப்பெற்ற ஒரு உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்டது. ஒரு காவல்நிலையத்தின்  அன்றாட செயல்பாடுகளை காட்சி அமைப்பில் நுணுக்கமாக கொண்டு வர, முயன்றிருக்கும் இயக்குநரின் முயற்சி, முதல் எபிசோட்டின் முதல் ஷாட்டிலேயே தெரிய வருகின்றது.  பணி நேரத்தில், காது குத்து விழாவிற்கு செல்லும் இன்ஸ்பெக்டர்,  ஸ்டேஷன் ஹவுஸ் ஆபீசராக எஸ்.ஐ யை நியமித்து, ஜிடி மெயின்டெயின் செய்ய சொல்லுவது , எஃப் ஐ ஆர், சிடிஆர் விவரங்கள், கிச்சா விமலிடம் பேசிய ஆடியோ ரிக்கார்ட் நீதிமன்றத்தில் சாட்சியமாக கொடுக்க முடியாது என முனிஷ் காந்திடம் ஏடிஸ்பி கத்துவது,  காவல் அடைப்பிற்கு பிறகு, குற்றவாளியை விசாரித்து,ஒப்புதல் வாக்குமூலம் பெற, நீதித்துறை நடுவரிடம் போலீஸ் காவல் எடுப்பது, ஒப்புதல் வாக்குமூலம் அடிப்படையில் தடயத்தை கைப்பற்றி குற்றத்தை நிருப்பிக்க முயல்வது என யதார்த்த நடைமுறைகளை நுணுக்கமாக தர இயக்குநர் முயன்றிருக்கின்றார். இந்த டீடெயிலிங், வெப் சீரிஸை சுவரஸ்யம் ஆக்குகின்றதா என்றால் இல்லை‌ என்பதே பதில்.  சப் இன்ஸ்பெக்டராக விமல் மனதில் பதியவே நேரம் எடுக்க...

கண்ணன் என்னும் கருந்தெய்வம்

இன்று 07/12/2021 ஸ்ரீரங்கம் வைகுந்த ஏகாதேசி பெருவிழாவில் கோதைப் பிராட்டியின் நாச்சியார் திருமொழியில் பதிமூன்றாம் பத்தாக வரும் கண்ணன் என்னும் கருத்தெய்வம் பாசுரம் அரையர் சேவையில் சேவிக்கப்படும் என்று படித்த பின் அந்த பாசுரத்தை எடுத்து படிக்க வேண்டும் என்ற ஆவல் பிறந்தது. கண்ணன் மேல் கொண்ட காதல் பித்து தலைக்கேறிய நிலையில் கோதை அவளது செவிலி தாய்மாரை நோக்கி, என்னை பழிப்பு செய்யாமல், என் நோய் தீர, கண்ணன் உடுத்திய பீதக வண்ண ஆடையினால் எனக்கு விசிறி விட மாட்டிரோ? அவன் சூடிய திருத்தூழயை ( துளசி) என் கூந்தலில் சூட மாட்டிரோ? அவன் தரிந்த வனமாலையை என் மார்பில் சேருங்கள், அவன் வாய் அமுததை கொண்டு வந்து ஊட்டுங்கள்,அதுவும் முடியவில்லை என்றால் அவன் ஊதும் புல்லாங்குழலில் தெறிக்கும் அமுத துளிகளையாவது முகத்தில் பூசுங்கள், அவன் இருக்கும் இடம் அழைத்து சென்று கண்ணனோடு பினைத்து கட்டுங்கள் என்று கதறுகின்றாள். மேலோட்டமாக பார்த்தால் விரக தாபம் போல் தான் தோன்றும்.பித்து முற்றிய யோகநிலை அது. முதல் பத்திலேயே ஆண்டாள் தாயார் தன் காதல் மானிடருக்கு உரித்தானது இல்லை என அறிவித்து விடுகின்றாள். நாச்சியாரின் கண்ணன் என்னும் க...

ஒரு சதய இரவு

கூரையில் இருந்து முத்துமாலையாய் கோர்த்து, முழுமை அடையாமல் மண்ணை தழுவும் மழைத்துளிகளை வெறித்து பார்த்துக் கொண்டு இருந்தான் ஜெயந்தன்.  ஜெயந்தன் வழி வழியாக பாண்டிய வம்சத்திற்கு விஸ்வாசம் காட்டும், பாண்டிய அமைச்சர் மானபரணின் மகன். மரண படுக்கையில் அவன் தந்தை சொல்லிய வார்ததைகள் அவன் செவிகளுக்குள் ஒலித்து கொண்டே இருந்தது.”ஜெயந்தா! மீண்டும் செழிஞரை அரியனையில் ஏற்றி நீ அழகு பார்க்க வேண்டும். செழிஞரை தேசு கொள் என கர்வமாக மெய்கீர்த்தி கொண்ட, ராஜனுக்கு ராஜன் என அகம்பாவமாய் அபிடேக நாமம் முடி சூடிய அந்த ராஜராஜன் கர்வம் அழிய வேண்டும்.” என சொல்லியவாறே உயிரை விட்டார்.ஆனால் பாண்டிய வம்சம் மீண்டும் ஏழ இன்னும் முன்று தலைமுறைக்கு வாய்ப்பு இல்லாமல் போய் விட்டது. சோழ படை , பாண்டியர் படையை நிர்மூலமாக்கி விட்டது. பெரிய பாண்டியர்  சேர நாட்டின் எல்லை பகுதியில் மறைந்து வாழ்ந்து வருகின்றார். இந்த மழைத்துளி முத்துக்கள் சகதியில் விழுவதை போல், சோழர் ஆதிக்கத்தில் இருந்து விடுபடும் பாண்டியரின் அனைத்து முயற்சிகளும் வீணானது. காரணம் ஒரே பெயர் தான் இராஜ ராஜன் என அபிடேக நாமம் சூடிய அருள்மொழி. விவேகம் இருப்பவரிடம் வ...

அப்பம் வடை தயிர்சாதம்

பாம்பேக்குப் போயிட்டு, மயிலாப்பூரையும் அம்மாவையும் அப்பாவையும் நினைச்சுண்டிருக்காதே... பாம்பேயே உன்னுடைய இடம். பாம்பேயே உன் வீடுன்னு வெச்சுக்கோ. நான் மாயவரத்தை விட்டுட்டு மெட்ராஸ் தான் எனக்குன்னு எப்படி வந்தேனோ... அதே போல, இந்த மண்ணை நன்னா உதறிட்டு, பாம்பேயை இறுகப் பிடிச்சுக்கோ. ஊரை கெட்டியா பிடிச்சுண்டா, உத்தியோகத்துல பிரியம் ஏற்படும். சொந்த ஊர் நினைப்பே இருந்ததுன்னா, உத்தியோகம் ஒட்டாது. உத்தியோகம் ஒட்டலைன்னா உயர முடியாது. உயரம் இல்லைன்னா, தாழ்த்தித்தான் பேசுவான். மண்மேல பாசம் வெச்சவன், மண்ணை விட்டுப் போகக்கூடாது. போறவன், பாசம் வைக்கப்படாது...’  அப்பம் வடை தயிர்சாதம் நாவலில் எழுத்து சித்தர் பாலகுமாரன். அப்பம் வடை தயிர்சாதம் பாலகுமாரன் அவர்களின் பிரபலமான நாவல். 2000ல் ஆனந்த விகடனில் தொடராக வந்தது. இப்போது மீண்டும் கண்ணில் பட மனதில் ஒரு சிலிர்ப்பு. அ.வ.த ,ஒரு பிராமண குடும்பத்தின் 100 வருட கால ஐந்து தலைமுறை கதையை சொல்லும்   நாவல். புரோகிதத்தை விடுத்து உணவு தொழிலை நாடி செல்லும் குடும்பம், காலத்தின் நகர்வுகளுக்கு ஈடுகொடுத்து ஐந்தாம் தலைமுறை  மென்பொருள் தொழிலில் தலைத் தூக...

சிந்தனையில் உதித்தவை

நெருப்புக்கு ஏதடா சுத்தம் அசுத்தம்? இது எழுத்தாளர் ஜெயமோகன் நான் கடவுள் படத்துக்கு எழுதின வசனம். நெருப்பை எதுவும் அசுத்தப்படுத்த முடியாது. ஏன் என்று யோசித்து‌ இருக்கின்றீர்களா? நெருப்பில் உயிரினம் வாழாது. உயிரின் டி.என்.ஏ , ஆர்.என்.ஏ உள்ள புரதங்களே நினைவுகளை கடத்துக்கின்றன. உயிர்கள் இல்லாத இடத்தில் நினைவுகள் இல்லை.நினைவுகள் இல்லாத இடத்தில் நேர்மறை எதிர்மறை எண்ணங்கள் என்னும் பேதம் இல்லை. எனவே நெருப்பு அசுத்தப்படுவதில்லை. நெருப்பு போன்ற நிலையை மனம் அடங்கியவர் அடையலாம். ஆனால் களிறு போல் துள்ளும் மனத்தை அடங்கி ஆள்வது எல்லோருக்கும் வாய்ப்பதில்லை. வாய்த்தவரும் நெருப்பும் வேறில்லை.

கார்ல்மார்க்ஸ் பிறந்தநாள்

இன்று காரல் மார்க்ஸின் 203 வது பிறந்தநாள். அவரின் மூலதனம் ( Das  Capital) என்ற நூலை படிக்காமல், இளங்கலைப் பொருளாதார படிப்பை நிறைவு செய்ய முடியாது. மூலத்தனம் என்பது தொழிலுக்கான முதல், கருவிகள் ஆகிய சேமிப்பு குவியல் என முதலாளித்துவ வல்லுநர்கள் வரையறுத்த போது, " மூலதனம் என்பது வரலாற்று ரீதியான இனம் " என்ற புதிய விளக்கம் அளித்தவர் காரல் மார்க்ஸ். உழைப்பு சக்தி ஓரு பண்டமாக மாறும் போது, உற்பத்தி சாதனங்களை கொண்ட முதலாளியும், உழைப்பை தவிர வேறு எதுவுமே உடைமையாக இல்லாத கூலி தொழிலாளியும் சமூகத்தின் முக்கிய நபர்களாக இருக்கும் போது மட்டுமே மூலதனம் தோன்றுகின்றது என மார்க்ஸ் எடுத்துக் காட்டினார். முதலாளித்துவம் வேறோடி போன 19  ஆம் நூற்றாண்டின் ஐரோப்பாவில் தொழிலாளரின் குரலை ஓங்கி ஒலித்தது காரல் மார்க்ஸின் குரல். மார்க்ஸின் குரலுக்கு வலு சேர்த்தது அவரின் நன்பர் ஏங்கல்ஸின் கரம். மரணம் தாண்டியும் தன் நன்பருக்கு துணையாக நின்றார் ஏங்கல்ஸ். மார்க்ஸ் மரணத்திற்கு பின் இறுதி காரியங்கள் செய்த பிறகு, அவரின் இரு மகள்களுக்கு தன் சொத்துக்களை உயில் எழுதி வைத்தார். மார்க்ஸை நினைக்கும் போது ஜென்னியை நினைக்காம...

சுஜாதா

இன்று எழுத்தாளர் சுஜாதா பிறந்தநாள்.இவருடைய, இயற்பெயர் ரங்கராஜன். "இடது ஓரத்தில்" என்ற இவருடைய சிறுகதை 1962 ஆம் ஆண்டு குமுதம் இதழில் ரங்கராஜன் என்ற பெயரில் வெளிவந்தது. குமுதம் ரா. கி. ரங்கராஜனின் பெயரும் இவர் பெயரும் குழப்பிக் கொள்ளப்பட்டதால் தன் மனைவி பெயரான, 'சுஜாதா'வைத், தன் புனைபெயராக வைத்துக் கொண்டார். கணையாழி இதழில் கடைசிப் பக்கங்கள் எனும் கட்டுரைத் தொடரை ஸ்ரீரங்கம் எஸ். ஆர் எனும் பெயரிலும் எழுதி வந்தார்.  சிறுகதை, புதினம், நாடகம், கவிதை, கட்டுரை, தொலைக்காட்சி, இணையம், திரைப்படம் என்று கால் பதித்த அனைத்துத் துறைகளிலும் தனது அழுத்தமான, தனித்துவமான முத்திரையைப் பதித்தவர் சுஜாதா (1935-2008). ஆண்டாள் முதல் அறிவியல் வரை எதையும் புதுமையாகவும் வசீகரிக்கக்கூடிய வகையிலும் வெளிப்படுத்தக்கூடிய ஆற்றல் பெற்றவை இவருடைய எழுத்துகள். சுஜாதாவின் விரிவான வாசிப்பும் அதற்கு ஒரு வகையில் காரணம்.   சுஜாதா சொல்லின் செல்வர்.‌ தொழில்முறை எழுத்தாளர் இல்லை அவர். அடிப்படையில் அவர் பொறியாளர். ஆனாலும் தம் மனதிருப்திக்காக, நேரம் கிடைக்கும் போதெல்லாம் எழுதி இருக்கின்றார். மனத்தின் குரல் வார்த்தைக...