Posts

உலக வன நாள்

இன்று உலக வன நாள். காடுகள் இன்றி அமையாதது உலகு. காடுகளின் ராஜா சிங்கம் என்றாலும், என்னை பொருத்தவரை காடுகளின் பிதாமகன் யானை தான். யானை, தனது வலசை பாதையில், தன் சாணத்தின் மூலம் ஒரு நாளைக்கு 30 கிலோ மீட்டர் அளவிற்கு, வனப்பரப்பின் எல்லையை விஸ்தரிக்க, விதைகள் தூவி செல்லும் . வேழக்காடுகள் என்றே ஊட்டி மலை பகுதியை பழம் கல்வெட்டுகள் குறித்து இருக்கின்றன. ஓடுகின்ற நதிகளின் மூலம் எல்லாமே காடுகள். காடுகள் அழிந்தால், நீரும் உணவும் இன்றி பஞ்சத்தில் மாள வேண்டியது தான். அடர்த்தியான வேழ காடுகள் மட்டும் அல்ல, கடற்கரை ஓரம் வளரும் குட்டை மரங்கள் உள்ள அலையாத்தி காடுகள், ஊசி முனை காடுகள் என காடுகளிலும் எத்தனை வகை.  தனிப்பட்ட முறையில் எனக்கு காடுகளின் அமைதி, தாய்மடியை போன்றது. மதுரையில் இருக்கும் போது பழமுதிர்ச்சோலை அடிக்கடி செல்வது வழக்கம். சூரிய ஒளிக்கூட எளிதாக ஊடுருவமுடியாத பழமுதிர்ச்சோலை மலையும், அங்கே ஓடி விளையாடும் வானரங்களும், தனி சந்நிதி கொண்டுள்ள வேலும் என்னை சங்க காலத்திற்கே அழைத்து போய்விடும். சங்க கால வேல் கோட்டத்திற்கு இன்றும் சாட்சியாய் இருப்பது பழமுதிர்சோலையும், சாளுவகுப்பம் முருகன் கோவிலு...

பெண் என்னும் பராசக்தி

வேதாந்தம் அடிப்படையில் எல்லாமே ஜீவாத்மா என்னும் போது ஆண் என்ன? பெண் என்ன? எல்லாமே ஒளியின் துளி அல்லவா என்று தோன்றினாலும் உடல் கூறு அடிப்படையில் உடலின் ஆறு சக்கரங்களை தூண்டி விடுவது ஒரு பெண்ணிற்கு கடினம் தான். ஆனால், ஹடயோகத்தின் மூலம் இதை பெண்ணை விட ஆண் , எளிதாகவே செய்ய முடியும். மூலாதார சக்கரத்தை உச்சியில் நிறுத்தி, சகஸ்கரஹாரத்தில் பிரபஞ்சத்துடன் தொடர்பு கொள்வதே யோக நிலை. இது பெண்ணுக்கு எளிதல்ல. ஏன்? இந்த பராபட்சம் என எண்னும் போது எனக்குள் தோன்றிய விடை பெண் படைப்பின் மூலம். கருப்பை என்னும் இருளின் சக்தி அவள். இருளில் இருந்தே ஒளி தோன்றுவதால் அவளுக்கு யோகநிலையின் சகஸ்கரஹார பிரகாசம் தேவை இல்லை. என்னெனில் எல்லா பிரகாசத்தின் ஒளிப்புள்ளியும் காரிருளில் தோன்றுபவையே.

மகளிர் தினம்

மகளிர் தினம் என்பதே மேற்கத்திய சிந்தனை தான். தமிழ் சமூகத்தின் பெண்கள் பற்றி நினைத்து பார்க்கின்றேன். சங்க காலத்தில் காக்கைபாடினியர், அவ்வையார் போன்ற பெண் பால் புலவர்கள் இருந்தார்கள். தமிழ் சமூகம் பெண்களை அடிமை படுத்த வில்லை.  அதனால் தான் ஒரு மன்னனின் அவையில் சாதாரண பெண், அதுவும் வேறு நாட்டு பெண் தன் கணவன் மரணம் குறித்து கேள்வி எழுப்பி நியாயம் கேட்க முடிந்தது.   அடல்மகளிர் கொடுத்த பல தானங்கள் குறித்து பல கல்வெட்டுகள் உள்ளன. அவர்களும் தனக்கு பிடித்த ஒருவனை கணவராக ஏற்று அவனோடு வாழ்ந்தார்கள். உதாரணம் கோவலன், மாதேவி. இடைக்காலத்தில் கூட பெண்கள் அதிகாரிச்சிகளாகஆக அரசு அமைப்பில்‌ அதிகாரம் செலுத்தி உள்ளார்கள்.‌தாய் வழி சமூகமான‌ தமிழ்‌ சமூகம் என்றும் பெண்ணை ஏத்தியே தொழுதுள்ளது. கொற்றவை என அன்னையரில் மூத்தவள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளாள். குமரியாகவும் அவள் வணங்கப்பட்டுள்ளாள்.‌ உறையூரில் வெக்காளி அம்மன் கோவிலும், கமலவள்ளி நாச்சியார் கோவிலும் எல்லாருக்கும் தெரியும். செல்லாண்டி அம்மன்‌ பற்றி சிலருக்கு தான் தெரியும். யதார்த்தமாக அந்த‌ கோவில் பற்றி தெரியாமலேயே அங்கு சென்று நின்றேன். சேர, ...

யானை ஆதி மனிதனின் முதல் காதல்

யானை எனக்கு‌ மிகவும் பிடித்த விலங்கு. நான் சிறுவயதில் இருந்தே குண்டான உடல்வாகு கொண்ட பெண். பப்ளிமாஸ், பிந்துகோஷ் குட்டியானை‌ போன்ற கேலிகளை கடந்து வந்துருக்கின்றேன். அதனாலோ என்னவோ எனக்கு சிறுவயதிலேயே யானை பிடிக்க தொடங்கிவிட்டது. வளர்ந்த பின் யானையின் குணாதிசயம் என்னை மிகவும் வசீகரித்தது. எவ்வளவு கம்பீரமான உயரமும், எடையும். ஆனால் குணத்தில் சிறு குழந்தை. அடக்கமான புத்திசாலியான விலங்கு. ஆனால் சீண்டினால், மதம் பிடித்த யானையின் சீற்றத்தை அடக்க முடியாது. யானையின் நீண்ட தும்பிக்கை சொல்லும் சுவாச பாடம் உணர்ந்தால், மனிதரும் 120 வருடங்கள் வாழலாம்.ஆனால் வாழ்த்தல் என்பது இருத்தலை மட்டும் குறிக்கும் நிகழ்வு அல்ல. பல்லுயிர் இயைந்து வாழும் பூமியில் மற்ற ஜீவராசிகளுக்கும்  உள்ள உரிமையை மதித்து வாழ்ந்தால் மட்டுமே, மனித வாழ்வு நிலைக்கும்; சிறக்கும். பட்டம்பூச்சிகளின்  அழிவு கூட உணவு சங்கிலியின் ஒரு கண்ணியை தகர்த்து மானுட அழிவிற்கு வழிவகுக்கும்.அதனால் தான்  ஐன்ஸ்டீன் தேனீயின் அழிவு மானுட அழிவு என்று சொன்னார். மகரந்த சேர்க்கை செய்ய தேனீக்கள் இல்லாது போனால், காடு பெருகாது. காடுகள் இல்லையெனில் ம...

பொங்கல்

பொங்கல் பண்டிக்கை பற்றி சங்க தமிழ் பாடல்களில் குறிப்பு உண்டா என்றால் இல்லை என்பதே மேலோட்டமான பதில். ஆனால் தை நீராடல் பற்றி பல பாடல்கள் உண்டு. பானையில் பொங்கி வரும் பொங்கல் பற்றிய உவமை  சீவக சிந்தாமணியில்  உண்டு. சிலப்பதிக்காரம் சதுக்க பூதத்திற்கு புழுக்கல் ( பொங்கல் ) படையல் போட்டது பற்றி சுட்டும். பிற்காலத்தில் ராஜேந்திர சோழன் காலத்தில் மகர சங்கராந்தியாக கொண்டாடப்பட்டுள்ளது. ஆனால் இது தமிழரின் உணர்வில் கலந்த பண்டிகை. மற்றோரு வகையில் யோசித்தால், இது பழங்குடிகளின் பண்டிகை. பரத கண்டத்தின் பழங்குடிகள் எல்லாம் வெவ்வெறு பெயரில் அறுவடை திருநாளை கொண்டாடுகின்றனர். பொங்கல் திருநாள் மானுடவியல் வளர்ச்சியை பறைசாற்றும் பண்டிகை. பொங்கலோ! பொங்கல்!.

ரங்காநதி

மூச்சு மூட்ட வைக்கும் வாழ்க்கையின் ஓட்டத்தில் நான் சரண் அடைவது ரங்காநதியிடம். கரையில் வந்து நிற்கும் என் முகத்தை, தன் நீர் பூசிய குளிர் காற்றின் கரத்தால் துடைத்துக் கொண்டே, இதற்கே அலறினால் என்ன செய்வது? இருளும் ஓளியும் மோதிக் கொள்ளும் பிரபஞ்சத்தின் ஆட்டத்தின் முன் இந்த வாழ்க்கையின் ஆட்டம் எல்லாம் சிறுப்பிள்ளை விளையாட்டு பேதை பெண்ணே என்று தன் நீர் சுழல்களை சுழற்றிக் கொண்டே ஓடிக்கொண்டு இருக்கின்றது ரங்கா நதி. அந்த சுழற்சிக்குள் எனது எண்ணங்கள் கரைந்து போக, மெய்மறந்து ரங்கா நதிக்கரையில் நிற்கின்றேன் தாயின் சேலை நுனி பிடித்து நிற்கும் சிறு கிள்ளை போல.❤️❤️ #ரங்காநதி

ஐப்பசி சதய விழா

 இன்று‌ ஐப்பசி சதய விழா.. எனக்கு சிறுவயத்தில் இருந்தே சரித்திரம் மிகவும் பிடிக்கும். கடந்த தலைமுறையின் அனுபவம் வரும் தலைமுறைக்கு பாடம் என நம்புகின்றேன்.  சரித்திர பக்கங்களில் என்னை மிகவும் கவர்ந்த மன்னர் ராஜராஜ சோழன் . நிர்வாகதிறனும் ஆளுமையும், பெருந்தன்மையும் இறை உணர்வும் இறை தேடலும் கொண்ட மன்னன் ராஜராஜர். ஆட்சி பீடம் ஏற சொந்த சகோதரர்களை பலி கொடுத்த  மன்னர்கள் சரித்திரத்தில் உண்டு. ஆனால் நாடு நகரம் மக்கள் அனைவரும் முடி சூட்டி கொள்ள வற்புறுத்தி இளமையில் ஆட்சி பீடத்தை கையில் கொடுத்தும், தன் ஒன்று விட்ட சித்தப்பாவிற்கு ஆட்சி மீது ஆசை என்பதால் விட்டு கொடுத்து அவர் காலத்திற்கு பின் 15 ஆண்டுகள் கழித்து தன் மத்திய வயதில் தான் சோழ அரசாட்சியை ஏற்றுக் கொண்டார் என திருவாலங்காடு செப்பெடுகள் கூறுகின்றன. அடுத்து பழம்பெருமை பேசாமல் செயல்திறனை காட்டியது. முதலாம் ராஜராஜர் வரை சோழ மன்னர்கள் கல்வெட்டு சூரிய குல தோன்றல் என் அரம்பித்து மனுநீதி சோழன் சிபி சக்கரவர்த்தி, கரிகால் சோழன் என முற்கால சோழரின் பெருமை பேசி தான் ஆரம்பிக்கும் . அதில் முக்கால்வாசி புராண கதை கலந்து இருக்கும். ராஜ ராஜர் தான...