Posts

ஆடி திருவாதிரையன்

சிறு வயதில் இருந்தே சோழர்கள் எனக்கு ஆதர்சமானவர்கள். பொன்னியின் செல்வன் நாவல் தான் என் சோழ பித்துக்கு விதை போட்டதோ என்று யோசித்தால், இல்லை என்பதே பதில். இந்த சோழ பித்துக்கான விதை என் தந்தை போட்டது. சோழ வரலாற்றில் என் தந்தையின் மனம் கவர்ந்தவர்கள் இருவர். ஒருவர் முதலாம் இராஜ இராஜ சோழனின் தமக்கையும் சோழர்களின் ஒப்புயர்வற்ற மாதரசியுமான குந்தவை பிராட்டி. அந்தப்புர பதுமைகளாக வலம்வந்த இளவரசிகள் மத்தியில், தம் புத்தி கூர்மையினால், தற்போதைய அரசு மருத்துவமனைகள் போல், இலவச சிகிச்சை வழங்கும் ஆதுல சாலைகளை சோழ மண்டலம் எங்கும் தமக்கு கிடைத்த சொத்துக்களை கொண்டு ஸ்தாபித்த அந்த மாதரசியின் அறிவாற்றலையும் , ஈகை குணத்தையும் எப்போதும் புகழ்ந்து பேசிக் கொண்டு இருப்பார் என் தந்தை. சோழ வரலாற்றில் என் தந்தையின்  மனங்கவர்ந்த இரண்டாவது நபர் இராஜேந்திர சோழன். வடக்கே கங்கை வரையிலும் கீழ்திசை நாடுகளில் பெரும்பாலான நாடுகளை ஒரு தமிழ் மன்னனாக கைப்பற்றிய  இராஜேந்திர சோழனின் படையெடுப்புகள் வெற்றிகள் பற்றிய பெருமித உணர்வு என் தந்தையிடம் எப்போதும் மிளிரும். ஒரு மன்னன் நாடு பிடிப்பது பெரிய விஷயமா? இதில் விதந்தோந்த எ...

பொன்னியின் செல்வன்

மூவேந்தர்களில் மற்ற இரு வேந்தர்களை விட, தற்காலத்தில்  சோழர்களின்‌ வரலாறு,அதிகம் கொண்டாடுப்படுவதற்கு முக்கிய காரணம் பொன்னியின் செல்வன் தான். இதை யாரும் மறுக்க முடியாது. ஆனாலும், பாண்டியர்களையும் நாவல் தலைவராகளாக கொண்டு, தீபம் நா. பார்த்தசாரதியும், சாண்டியல்யனும் பல நாவல்கள் எழுதியுள்ளனர்.ஆனாலும் பொன்னியின் செல்வன் பெற்ற கவன ஈர்ப்பையும் , கொண்டாட்டத்தையும்  அந்த நாவல்கள் பெறவில்லை.   பொன்னியின் செல்வனின் மாபெரும் வெற்றிக்கு,கல்கியின் எழுத்து வன்மை காரணம் என்றாலும், அவர் எடுத்துக் கொண்ட கதைக்களமும் ஒரு முக்கிய காரணம். ஆயிரம் ஆண்டுகளையும் தாண்டிய நீண்ட நெடிய வரலாறு கொண்ட, சோழ பேரரசின் வரலாற்றில், ஒளி மிகுந்த, எழுச்சியான காலக்கட்டம் கிபி 950- 980 கிபி. இதை கல்கியே நாவலில் , சோழ சம்ராஜ்ஜியம் இப்போது ஆடி புனல் போல் பல்கி பெருகும் காலக்கட்டம் என்று சொல்லி இருப்பார். எழுச்சி என்று ஒரு இருந்தால், போட்டியும் பொறாமையும் சேர்ந்தே வளரும் .சோழ சம்ராஜ்ஜியம் வளர்ந்து கொண்டு இருந்தாலும், கிபி 949- கிபி 962 13 வருடங்களில், கண்டாராத்தித்தர், அரிஞ்சயர், சுந்தரசோழர் என மூன்று மன்னர்களை கண...

முதலாம் சடையவர்ம சுந்தர பாண்டியன்

இன்று சித்திரை மூலம் பிற்கால பாண்டியரில் புகழ்ப்பெற்ற முதலாம் சடையவர்ம சுந்தரபாண்டியனின்  ஜென்ம நட்சத்திரம். பொன்னியின் செல்வன் நாவலின் பிரமாண்டமான வெற்றிக்கு பிறகு, ராஜராஜ சோழரும், ராஜேந்திர சோழரும் கொண்டாடப்பட்ட அளவுக்கு வேறு தமிழ் மன்னர்கள் கொண்டாடப்படவில்லை.. ஆனால் இராஜேந்திர சோழருக்கு இனையாக தமிழக நிலப்பகுதிகள் தாண்டி, இன்றைய கேரளா, ஆந்திரா நெல்லூர் பகுதி, கர்நாடகாவின் கோலார் பகுதி, இலங்கை மற்றும் தாய்லந்து நாடு வரை கைப்பற்றி மிகப்பெரிய பிற்கால சாம்ராஜ்யத்தை கட்டி அமைந்தவர். ஆனால் இவரின் பிற்கால வாரிசுகள், பங்காளி சண்டையிட்டு, மாலிக் கபூரின் படையெடுப்பிற்கு காரணம் ஆனார்கள்.  ஆனால் இவர் அமைந்த ராஜப்பட்டையை சரியாக பயன்படுத்தி அமைந்தது தான் விஜயநகர சம்ராஜ்யம். பழுத்த சிவ பக்தரான இவர், சிவ ஆலயங்களுக்கு மட்டும் அல்ல வைணவ ஆலயங்கள் பலவற்றுக்கும் திருப்பணி செய்துள்ளார். திருவானைக்காவல் கோவில் மூலஸ்தான நுழைவு வாயிலில் உள்ள பாண்டியர் சின்னமாம், இரட்டை கயல் இன்னும் சுந்தரபாண்டிய மன்னரின் புகழைப் பாடிக்கொண்டே இருக்கிறது. ஸ்ரீரங்கம் கோவிலுக்கு இவர் செய்த திருப்பணிகள் பல. சிதம்பரம் கோவ...

அவள் பெயர் கண்ணகி ..

சித்திரை மாத முழுநிலவு நாள் இரு தினங்களுக்கு முன் கழிந்தது. மங்கலதேவி கண்ணகி கோட்டத்தில் நடந்த விழா நிகழ்வுகளை சமூக வலைத்தளங்களில் பார்த்ததில் இருந்து மனதில் சுழற்று கொண்டு இருக்கின்றது கண்ணகி பற்றிய சிந்தனைகள். உலக பரம்பரிய தினமான இன்று தமிழ் சமூகத்தின் முக்கிய தொன்ம குறியீடான கண்ணகியை பற்றி எழுதுவதும் பொருத்தமான ஒன்று தான். காப்பிய நாயகி அவள்; வெறும் கற்பனை பாத்திரம், என கடந்து போய் விட முடியாது கண்ணகியை. அவள் இரத்தமும் சதையுமாக இம்மண்ணில் வாழ்ந்து மறைந்த பெண் மலர். இதற்கு மானுடவியல் சான்று பல உண்டு. கோவலனை கைப்பிடித்த போது அவள் பால்யம் மாறா குழந்தை தான். கண்ணகியை முதிராக் குளவியள் என்று சிலம்பு குறிப்பிடுக்கின்றது. கிள்ளை பருவத்திலேயே மணமுடித்து கொடுக்கப்பட்டு, இனி உன் வாழ்வு என்பது உன் பதியை சார்ந்தது என கணவனை மட்டுமே சார்ந்து தன் வாழ்வை துவங்கிய பேதை அவள். மாதவி என்னும் அழகி மீது மையல் கொண்டு கோவலன் கண்ணகியை பிரிய, வாழ்வு இருண்டு தான் போனது கண்ணகிக்கு. இருண்ட வாழ்வில் மீண்டும் முளைத்த வெள்ளியாக, செல்வம் கரைந்த பின்னும் மீண்டு வந்த செல்வமாக கணவன் திரும்பி வர, நல்ல எதிர்காலத்தை எதிர...

விலங்கு வெப் சீரிஸ்

விலங்கு வெப் சீரிஸ் இப்போது தான் பார்த்தேன். திருச்சியில் நடைப்பெற்ற ஒரு உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்டது. ஒரு காவல்நிலையத்தின்  அன்றாட செயல்பாடுகளை காட்சி அமைப்பில் நுணுக்கமாக கொண்டு வர, முயன்றிருக்கும் இயக்குநரின் முயற்சி, முதல் எபிசோட்டின் முதல் ஷாட்டிலேயே தெரிய வருகின்றது.  பணி நேரத்தில், காது குத்து விழாவிற்கு செல்லும் இன்ஸ்பெக்டர்,  ஸ்டேஷன் ஹவுஸ் ஆபீசராக எஸ்.ஐ யை நியமித்து, ஜிடி மெயின்டெயின் செய்ய சொல்லுவது , எஃப் ஐ ஆர், சிடிஆர் விவரங்கள், கிச்சா விமலிடம் பேசிய ஆடியோ ரிக்கார்ட் நீதிமன்றத்தில் சாட்சியமாக கொடுக்க முடியாது என முனிஷ் காந்திடம் ஏடிஸ்பி கத்துவது,  காவல் அடைப்பிற்கு பிறகு, குற்றவாளியை விசாரித்து,ஒப்புதல் வாக்குமூலம் பெற, நீதித்துறை நடுவரிடம் போலீஸ் காவல் எடுப்பது, ஒப்புதல் வாக்குமூலம் அடிப்படையில் தடயத்தை கைப்பற்றி குற்றத்தை நிருப்பிக்க முயல்வது என யதார்த்த நடைமுறைகளை நுணுக்கமாக தர இயக்குநர் முயன்றிருக்கின்றார். இந்த டீடெயிலிங், வெப் சீரிஸை சுவரஸ்யம் ஆக்குகின்றதா என்றால் இல்லை‌ என்பதே பதில்.  சப் இன்ஸ்பெக்டராக விமல் மனதில் பதியவே நேரம் எடுக்க...

கண்ணன் என்னும் கருந்தெய்வம்

இன்று 07/12/2021 ஸ்ரீரங்கம் வைகுந்த ஏகாதேசி பெருவிழாவில் கோதைப் பிராட்டியின் நாச்சியார் திருமொழியில் பதிமூன்றாம் பத்தாக வரும் கண்ணன் என்னும் கருத்தெய்வம் பாசுரம் அரையர் சேவையில் சேவிக்கப்படும் என்று படித்த பின் அந்த பாசுரத்தை எடுத்து படிக்க வேண்டும் என்ற ஆவல் பிறந்தது. கண்ணன் மேல் கொண்ட காதல் பித்து தலைக்கேறிய நிலையில் கோதை அவளது செவிலி தாய்மாரை நோக்கி, என்னை பழிப்பு செய்யாமல், என் நோய் தீர, கண்ணன் உடுத்திய பீதக வண்ண ஆடையினால் எனக்கு விசிறி விட மாட்டிரோ? அவன் சூடிய திருத்தூழயை ( துளசி) என் கூந்தலில் சூட மாட்டிரோ? அவன் தரிந்த வனமாலையை என் மார்பில் சேருங்கள், அவன் வாய் அமுததை கொண்டு வந்து ஊட்டுங்கள்,அதுவும் முடியவில்லை என்றால் அவன் ஊதும் புல்லாங்குழலில் தெறிக்கும் அமுத துளிகளையாவது முகத்தில் பூசுங்கள், அவன் இருக்கும் இடம் அழைத்து சென்று கண்ணனோடு பினைத்து கட்டுங்கள் என்று கதறுகின்றாள். மேலோட்டமாக பார்த்தால் விரக தாபம் போல் தான் தோன்றும்.பித்து முற்றிய யோகநிலை அது. முதல் பத்திலேயே ஆண்டாள் தாயார் தன் காதல் மானிடருக்கு உரித்தானது இல்லை என அறிவித்து விடுகின்றாள். நாச்சியாரின் கண்ணன் என்னும் க...

ஒரு சதய இரவு

கூரையில் இருந்து முத்துமாலையாய் கோர்த்து, முழுமை அடையாமல் மண்ணை தழுவும் மழைத்துளிகளை வெறித்து பார்த்துக் கொண்டு இருந்தான் ஜெயந்தன்.  ஜெயந்தன் வழி வழியாக பாண்டிய வம்சத்திற்கு விஸ்வாசம் காட்டும், பாண்டிய அமைச்சர் மானபரணின் மகன். மரண படுக்கையில் அவன் தந்தை சொல்லிய வார்ததைகள் அவன் செவிகளுக்குள் ஒலித்து கொண்டே இருந்தது.”ஜெயந்தா! மீண்டும் செழிஞரை அரியனையில் ஏற்றி நீ அழகு பார்க்க வேண்டும். செழிஞரை தேசு கொள் என கர்வமாக மெய்கீர்த்தி கொண்ட, ராஜனுக்கு ராஜன் என அகம்பாவமாய் அபிடேக நாமம் முடி சூடிய அந்த ராஜராஜன் கர்வம் அழிய வேண்டும்.” என சொல்லியவாறே உயிரை விட்டார்.ஆனால் பாண்டிய வம்சம் மீண்டும் ஏழ இன்னும் முன்று தலைமுறைக்கு வாய்ப்பு இல்லாமல் போய் விட்டது. சோழ படை , பாண்டியர் படையை நிர்மூலமாக்கி விட்டது. பெரிய பாண்டியர்  சேர நாட்டின் எல்லை பகுதியில் மறைந்து வாழ்ந்து வருகின்றார். இந்த மழைத்துளி முத்துக்கள் சகதியில் விழுவதை போல், சோழர் ஆதிக்கத்தில் இருந்து விடுபடும் பாண்டியரின் அனைத்து முயற்சிகளும் வீணானது. காரணம் ஒரே பெயர் தான் இராஜ ராஜன் என அபிடேக நாமம் சூடிய அருள்மொழி. விவேகம் இருப்பவரிடம் வ...