மங்கயர்கரசி (பகுதி2)

“பெருநம்பி குலச்சிறை தன் அடியார்க்கும் அடியேன்”
                 - பெரிய புராணம்
பாண்டிய நாட்டின் மனல்மேல்குடி பகுதியை சேர்ந்தவர் குலசிறை நம்பி.
இவரை தான் சம்பந்தரிடம் தூது அனுப்பினார். பாண்டிமாதேவி மங்கயர்கரசி. அப்போது சம்பந்தர் திருமறைக்காடு என்னும் வேதாரண்யம் பகுதியில் இருந்தார். சைவ நெறியை பரப்பும் வாய்ப்பை சம்பந்தர் தவற விடுவாரா என்ன?
வந்தார் மதுரைக்கு. சமணர்கள் ஞான சம்பந்தரை அழிக்க அவர் தங்கியிருந்த மடத்திற்கு தீ வைத்தனர். சமணர்களின் தீய எண்ணம் மன்னனுக்கு புரிய அந்த வெப்பத்தை பதிகம் பாடி பாண்டிய மன்னரை நோக்கி திருப்பினார் ஞான சம்பந்தர். அப்போதும் பாண்டிய மன்னன் மேல் கரிசனம் கொள்கிறார். எப்படி? ஏன்? என்ன இருந்தாலும் அவன் மங்கயர்கரசியின் மணவாளன் அல்லவா? ஒரு சிவ பக்த்தையின் கணவரை காப்பது சிவனடியார் பொறுப்பு அல்லவா? வெப்பம் வேகமாக சென்று தாக்கினால் மன்னனால் தங்க முடியாது என்று பையவே சென்று மன்னனுக்கு ஆகுக என்று அனுப்பி வைத்தார். அதாவது அந்த வெப்பதிடம் மெதுவாக சென்று மன்னனை சேர் என்று சொன்னாராம். மன்னனை வெப்ப நோய் தாக்கியது. அலறி தவித்தாள் மானி என்னும் மங்கயற்கரசி. போர் பரிசாக வந்தவள் தான். ஆனாலும் அவளுக்கு பாண்டிய மன்னன் மேல் அளப்பரிய காதல் இருந்தது. அதே காதல் பாண்டிய தேசத்தின் மீதும் இருந்தது. அவள் செய்த நற்செயல்கள் காரணமாக தான் மானி என்னும் அவள் இயற்பெயர் மறந்து போகும் அளவுக்கு, அவளை மங்காயர்கரசி என போற்றினர் பாண்டிய தேச மக்கள். மன்னனின் வெப்பு நோய் தீர்ப்பதிலும் ஒரு திருவிளையாடல் நடத்தினான் அந்த பரமன்
(தொடரும்)

Comments

Popular posts from this blog

அப்பம் வடை தயிர்சாதம்

ஆதித்த கரிகாலன் கொலை வழக்கு ( பகுதி4)

ஆதித்த கரிகாலன் கொலை வழக்கு