அனுபவம்
இன்னிக்கு ஒரு அதிசயம் பரந்தாமன் என் வாழ்வில் நடத்தினான். தொடர் ஊரடங்கு, கொரானா பயம் என மிகுந்த மன அழுத்தத்தின் காரணமாக, மூன்று நாட்களாக தூக்கம் பிடிக்காமல் தலை பாரம் ஏறி போய் கிடந்தேன். தூங்கியே ஆக வேண்டும். ஆனால் தூக்கம் வரவில்லை. எனக்கு அழுத்தம் கூடும் போது எல்லாம் கிருஷ்ணரை அதுவும் குருவாயூர் கிருஷ்ணரை சரணடைவேன். இது என் பிறவி இயல்பு. அப்படி தான் அவனிடம் புலம்பினேன். கிருஷ்ணா உன் கரம் எந்தும் தாமரை மேல் தேன் குடித்து மயங்கும் வண்டை போல, என்னையும் உறங்க செய்வாயா என. புலம்பலில் ஊடே அயர்ந்து தூங்கி விட்டேன். தாய் கருவறை இருட்டை போல கனத்த அமைதியில் சிந்தனை எதுவும் இல்லா ஆழ்ந்த தூக்கம். எழுந்ததும் மிகவும் புத்துணர்ச்சி ஆக எழுந்தேன். வெறும் அரை மணி நேர உறக்கம்,3 நாட்கள் தூங்காத தூக்கத்தை ஈடு செய்தது. சிலருக்கு இது பேத்தலாக தெரியும். ஆனால் என் அனுபவம் இது. அழைத்தவுடன் ஓடி வரும் பரம்பொருள் அவன். பூசனைகள் தேவை இல்லை அவனுக்கு அன்பு ஒன்றே போதும்.
Comments
Post a Comment