ஜோதிகாவின் உளறல்கள்

தனிமனித தாக்குதல்களில்  எனக்கு எப்போதும் உடன்பாடு இல்லை. ஆனால் சமீப கால ஜோதிகா பெரிய கோவில் சர்ச்சையை தொடர்ந்து அவரது பழைய வீடியோவை பார்க்க நேர்ந்தது. அதிலும் கோவில்கள் உண்டியலில் போடும் காசை போல அரசு பள்ளிகளுக்கு செலவு செய்யுங்கள் என்று கூறுகின்றார். அரசு பள்ளி, அரசு மருத்துவமனை இரண்டும் அரசு கட்டுப்பாட்டில் வரும். அதில் பொதுமக்கள் நினைத்தவுடன் போய் தானம் செய்ய முடியாது. அரசு அனுமதி வேண்டும். ஆனால் அரசு பள்ளி, அரசு மருத்துவமனை ஆகியவற்றை பராமரிப்பது போன்றவற்றை ஏன் கோவில் உண்டியல் பணத்தோடு முடிச்சு போட்டு கருத்து சொல்ல வேண்டும். அதுவும் தொடர்ந்து இதே போல் பேசி வருவது ஏன்? கோவில்கள் மேல் உள்ள வெறுப்பா? எனக்கு தெரிந்து பலர் அரசு மருத்துவமனை வாசல்களில் அன்னதானம் செய்கின்றனர். ஈரோட்டில் அரசு மருத்துவமனைக்கு அருகில் 1 ரூபாய்க்கு சாப்பாடு கொடுக்கின்றனர் ஒரு தம்பதியினர். நான் பிறந்த ஊரில் அரசு பள்ளி சத்துணவு கட்டிடத்தை நன்கொடை அளித்து கட்டினர் அதன் முன்னாள் மாணவர்கள் பலர். உண்டு உறைவிட பள்ளி குழந்தைகளுக்கு சத்துணவாக பயறு, முந்திரி பருப்பு, முட்டை வகைகளை அனுப்பி வைக்கும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் பற்றி அறிந்து இருக்கின்றேன். அவர்கள் யாரும் கோவிலை இழுக்கவில்லை. சத்தம் போடாது, அறம் செய்து வருகின்றனர். அகரம் என்ற ஒரு அறக்கட்டளையை பலர் தானம் பெற்று நடத்தி கொண்டு, அதிலும் வருமான வரி சலுகை பெறும் ஜோதிகா இப்படி ஏன் கோவிலை இழுத்து பேசுகின்றார். அகரம் பற்றி சொல்லும் போது, எங்கள் பகுதயில் இயங்கும் பூண்டி புஷ்பம் கல்லூரி பற்றி சொல்ல வேண்டும். அங்கு பலருக்கு இலவச கல்வி அளித்து வருகின்றனர், மூன்று தலைமுறையாக. ஆனால் பயனாளிகளை மேடை ஏற்றி அவர்களை கண்ணீர் விட செய்து, அந்த கண்ணீரை தொலைக்காட்சியில் ஒளிபரப்பி,கண்ணீரில் விளம்பரமும் காசும் தேடி கொழிக்கவில்லை அவர்கள். கேட்டால் திருமூலரை இழுப்பார்கள். அவரே ஒரு நாயன்மார்‌. கோவில் வேண்டாம் என அவர் சொன்னாரா? உள்ளம் பெருங்கோயில் என உள்ளமே கடவுள் என கொண்டவர். அவருக்கு அன்பே சிவம். அன்பே சிவம் என்றால் துஷனை இல்லாத மனது.  தூஷனம் கொண்டு கோவிலை வம்புக்கு இழுக்கும்  வம்பர்கள் அவரை மேற்கோள் காட்டுவதும் கால கொடுமை தான்.

Comments

Popular posts from this blog

ஆதித்த கரிகாலன் கொலை வழக்கு ( பகுதி4)

அப்பம் வடை தயிர்சாதம்

ஆதித்த கரிகாலன் கொலை வழக்கு