கீதாஸாரம்

கீதாசாரம் நான் புரிந்து கொண்ட வகையில்
எல்லாம் மாயை. இங்கு நடப்பது முன்பே நிர்ணயிக்கப்பட்டது. ஆத்மா அழிவில்லாதது; பரிசுத்தமானது. நெருப்பால் எரிக்கவோ அயுதத்தால் வெட்டவோ முடியாதது. பரமாத்மாவின் துளிகள் ஜீவாத்மா.
நல்லவன் என்பது வேறு; கடவுளை தேடும் நல்லவன் என்பது வேறு. நீ நன்மை புரிந்தாலும் தீமை புரிந்தாலும் மீண்டும் உன் கர்ம கணக்கை தீர்க்க இந்த பூமியில் பிறந்து தான் ஆக வேண்டும். இது மாயை ஆடும் விளையாட்டு
எந்த தெய்வ வழிப்பாடும், பரம்பொருளில் சென்று சேரும்.
சந்நியாசியை விட இல்லாற தர்மத்தில் இருந்தும் பற்றில்லா வாழ்க்கை வாழும் கர்மயோகி கடவுளுக்கு பிரியமானவன்.
கலியுகத்தில் இறைவனை அடைய எளிய வழி நாம சங்கீர்த்தனை. மெல்ல அந்த நாமங்கள் சொல்ல சொல்ல தன் எண்ணங்கள் கரைத்து எண்ணமில்லா நிலையை அடைய முடியும். எண்ணமில்லா ஒரு நிலையில் ஜீவாத்மா பரமாத்மாவை அடைகின்றது.
*பகவத் கீதை*  *18 ஆம் அத்தியாயம்*  *மோட்ச சந்நியாச யோகத்தின் ஒரு பகுதி*
அர்ஜுனா, எல்லா உயிர்களுக்கும் பரம்பொருள் உள்ளத்தில் நிற்கிறான். மாயையால் அவன் எல்லா உயிர்களையும் சக்கரத்திலேற்றிச் சுழற்றுகிறான்.
அர்ஜுனா, எல்லா வடிவங்களிலும் அவனையே சரணெய்து, அவனருளால் பரம சாந்தியாகிய நித்திய ஸ்தானத்தை எய்துவாய்.
கீதையின் 18 அத்தியாயத்தில் கீதாஸாரம் அனைத்தும் அடங்கிவிடும். கிட்ட தட்ட ஒரு படத்தின் கிளைமேக்ஸ் போல.  மோட்ச சந்நியாச யோகம் என்பது காணும் பொருட்களில் எல்லாம் பரம்பொருளை உணர்வது. காக்கை சிறகினிலே நந்தலாலா உன் கரிய நிறம் தோன்றுதடா நந்தலாலா என பாடிய பாரதியும் மோட்ச சந்நியாச யோகி தான். சுருக்கமாக உள்ளத்தை கடவுளுக்கு அர்ப்பணிப்பு செய்வதே மோட்ச சந்நியாச யோகம்❤

Comments

Popular posts from this blog

ஆதித்த கரிகாலன் கொலை வழக்கு ( பகுதி4)

அப்பம் வடை தயிர்சாதம்

ஆதித்த கரிகாலன் கொலை வழக்கு