தனிமை ஒரு தவம்
இன்றைய அவசர யுகத்தில் தனிமை என்பது அரிதாக போய்விட்டது. தனிமை என்பது தனித்திருப்பது மட்டும்மல்ல விழித்திருப்பது. தனித்திருக்கும் போது தான் பல சிந்தனைகள் கிளர்ந்து எழுகின்றன....... இப்போதெல்லாம் தனிமையில் இருக்கும் பொழுது என் மனதில் எழும் கேள்வி இதுதான் : எதற்காக இந்த வாழ்க்கை? இந்த வாழ்க்கையின் நோக்கம் என்ன ? பணம் சம்பாதித்து , திருமணம் செய்து , பிள்ளை பெற்று, அதை வளர்த்து , பிறகு ஒரு நாள் மரணம் நம் வாழ்க்கைக்கு முற்று புள்ளி வைக்கும். இதற்க்காகத்தான் நான் பிறந்தேனா? தனிமையில் என் மனம் சுதந்திரத்தை விரும்புகிறது , இயற்க்கை எந்த பூமியில் புதைத்து வைத்திருக்கும் அதிசயங்களை எல்லாம் அனுபவிக்க விரும்புக்கிறது . காற்றை போல் கட்டுப்பாடின்றி , பறக்க தோன்றுகிறது ...பாசம் பந்தம் ஆசை என்ற மாய கயிறுகள் அவிழ அவிழ ......... இணையற்ற பேரானாந்தம் முகிழ தொடக்குகிறது .....
Comments
Post a Comment