பெண்ணியம்
பெண்ணியம் என்றால் என்ன? சுய ஒழுக்கம் அற்று திரிவதற்கு பெயர் பெண்ணியம் கிடையாது. பெண்ணுடைய உடல், உடைமை கிடையாது என்றார் பெரியார். கருப்பையின் மூலமே பெண் அடிமை ஆகிறாள் என சொன்னார். ஆனால் இதற்கு அர்த்தம் தனி மனித ஒழுக்கம் இல்லாது திரிவது இல்லை. விலங்குகள் கூட ஒரு இணையுடன் வாழும் போது மற்ற விலங்கை சேர்வது இல்லை. பெரியார் பெயரை சொல்லி சில பெண்கள் அடிக்கும் கூத்துகளும், அதை கண்டிக்கிறேன் என்று பண்ணையார் மனோபாவத்தில், தனி நபரின் அந்தரங்கத்தில் மூக்கை நுழைத்து மிரட்டல் விடுக்கும் பெண்களும் என இதை இணைய வெளியில் காணும் போது வேதனையே மிஞ்சுகிறது. நான் ஆத்திகவாதி. பெரியாரின் பல கருத்துகளுடன் என்னால் ஒத்து போக முடியாது. பெரியார் கருப்பையை அடிமைத்தனத்தின் வாசலாக பார்த்தார். என்னை பொறுத்தவரை கருப்பை அன்பின் வாசல். பெண் படைப்பின் ஆதாரம். அன்பு என்பதே அவளது பலமும் பலவீனமும். ஆணை விட பல மடங்கு மனோபலம் அவளுக்கு அன்பினால் தான் கிடைக்கின்றது. இது போல பல விஷயங்களில் நான் பெரியரோடு மாறுபடுகிறேன். ஆனால் இன்று நான் பட்ட படிப்பு முடித்த பெண்ணாக சொந்த காலில் நிற்க, முத்திர சட்டி ஏந்தி கடைசி வரை சமூக நீதி போதித்த அந்த கிழவனும் ஒரு பெருங்காரணம். ஆண்களை வெறுப்பது பெண்ணியம் இல்லை. ஆண்களின் வக்கிரத்தை புறந்தள்ளி தனக்கான வாழ்வை , தனக்கான லட்சியத்தை முன்னோக்கி செல்வதே பெண்ணியம்.ஆனால் இவர்கள்,சில தனி மனித வக்கிரகளுக்கு இரை போட்டு கொண்டு, அதற்கு பெரியாரின் பெயரை பலியிடுவது சோகம் தான்.
Comments
Post a Comment