இன்று சித்திரை திருவாதிரை இராமானுஜர் அவதார திருநாள். த்வைதம் அத்வைதம் தாண்டி, பரந்தாமனே, சகல ஜீவ ராசிகளில் நிறைந்து உள்ளான். அந்த பரமாத்மாவின் துளி தான் ஜீவாத்மா, பரமாத்மாவை அடைவதே ஜீவாத்மாவின் நோக்கம் என விசிட்டத்வைத தத்துவம் கண்டவர்.அவருக்கு சைவத்தின் மேல் தூஷனை இல்லை. அவரை பொறுத்தவரை பரம்பொருள் என்பது,பெருமாள் தான். வைணவத்திற்கும், சைவத்திற்குமான வேறுபாடு, ஜீவாத்மாவும் பரமாத்மாவும் ஒன்று என்பது சைவம். உள்கிட என்பதே வெளியில் கடவுள் என்பது அதன் தத்துவம். வைணவம் பரமாத்மாவின் துளி ஜீவாத்மா. அந்தரியாமி ஆக உள்ளத்தில் கடவுள் வெளிப்பட்டாலும் இரண்டும் வேறு என்பது வைணவ தத்துவம். ஆனால் இரண்டிற்கும் பிறருக்கு துன்பம் விளைவிக்கா சாத்வீகமே அடிப்படை. சைவம் கூட காபலிகம் என ஆக்ரோஷ வடிவம் கண்டது. ஆனால் வைணவம் சாத்வீகமானது. அந்த அமைதியை, சாத்வீக குணத்தை கெட்டியாக பிடித்து கொண்டவர் ராமானுஜர். அதனால் தான் தனக்கு விஷம் வைத்தவர்களிடம் கூட அவருக்கு கோபம் இல்லை. என் மனதுக்கு உகந்த குரு அவர். இராமானுஜர் வரலாற்றை அறிய படிக்க வேண்டிய நூல், பா. ராகவனின் பொலிக பொலிக! மிகைப்படுத்துதல் இல்லா எழுத...